கடந்த 17 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவரும் ரூ. 25 ஆயிரம் வெகுமதி அறிவிக்கப்பட்டுத் தேடப்பட்டுவந்த வங்கதேசத்தவரை, சஹாரன்பூர் காவல்துறை, பயங்கரவாத எதிர்ப்புப் படையின் கூட்டு முயற்சியில் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முறையான ஆவணங்கள் மற்றும் கடவுச்சீட்டுகள் இன்றி சட்டவிரோதமாகத் தங்கிப் பணியாற்றும் நோக்கத்துடன் பல வங்கதேச நாட்டவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாகக் கூறி, உளவுப்பிரிவு அதிகாரி ஒருவர் ஆகஸ்ட் 8, 2009 அன்று புகார் அளித்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக குதுப்ஷெர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய மூவர் தண்டிக்கப்பட்ட நிலையில், ஜாமீனில் வெளியே வந்திருந்த ஜாஹித் 2009-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்ததாகக் காவல்துறை கூறியது. அவருக்கு எதிராக நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளையும் பிறப்பித்திருந்தது.
சஹாரன்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்கின் உத்தரவின் பேரில், சில்கானா காவல் நிலையப் பொறுப்பாளர் வினோத் குமார், ஏடிஎஸ் சஹாரன்பூர் பிரிவுப் பொறுப்பாளர் சுதிர் குமார் உஜ்வால் ஆகியோர் தலைமையிலான கூட்டுப்படையினர் ஜாஹித் என்பவரை உ.பி.யின் சைஃபான் புலியா அருகே கைது செய்யப்பட்டது.
சோதனையின்போது, ஆதார் அட்டை, சந்தேகத்திற்குரிய பிற ஆவணங்களின் புகைப்படங்கள் அடங்கிய அலைபேசி ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.
2009-ஆம் ஆண்டு முதல் காவல்துறை, நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க ஜாஹித் பல்வேறு மாநிலங்களில் பதுங்கியிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஏடிஎஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மியான்மர், வங்கதேசம் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுடனும் அவர் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் தங்கியிருக்கக்கூடிய அவரது மற்ற கூட்டாளிகளைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.
A joint team of Saharanpur police and the Anti-Terrorism Squad (ATS) has arrested a Bangladeshi national carrying a reward of Rs 25,000, who had been absconding for the past 17 years, officials said on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக நிர்வாகி புகார்: யூடியூபர் முக்தார் கைது!

தில்லி ஹோட்டல் தீ விபத்து: உரிமையாளரின் மேலாளரைத் தேடும் காவல்துறை

பாடகர்கள் வெட்டிக் கொலை: 7 பேர் கைது!

உ.பி. மத நிகழ்வில் பிரசாதம் உண்ட 60 பேருக்குப் பாதிப்பு!
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope




