பேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

திரிணமூல் உள்கட்சிப் பூசல்: அபிஷேக் பானர்ஜியை சந்திக்க ஓம் பிர்லா அழைப்பு?

திரிணமூல் காங்கிரஸ் உள்கட்சிப் பூசல் தொடர்பாக அபிஷேக் பானர்ஜியை சந்திக்க மக்களவைத் தலைவர் அழைப்பு விடுத்திருப்பதாகத் தகவல்

News image

அபிஷேக் பானர்ஜி | ஓம் பிர்லா - கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 5:58 pm IST

திரிணமூல் காங்கிரஸ் உள்கட்சிப் பூசல் தொடர்பாக அபிஷேக் பானர்ஜியை சந்திக்க மக்களவைத் தலைவர் அழைப்பு விடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றநிலையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி மீது கட்சியிக்குள்ளேயே எதிர்ப்பும் அதிருப்தியும் கிளம்பின. இதனிடையே, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாப்ரதா பானர்ஜியை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தேர்ந்தெடுத்தனர்.

மேலும், கட்சி எம்.பி.க்கள் 20 பேர் தனியாகப் பிரிந்து, தங்களைத் தனிக் குழுவாக அறிவிக்க வேண்டும் என்று மக்களவையில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸின் உள்கட்சிப் பூசல் விவகாரம் தொடர்பாக அபிஷேக் பானர்ஜி தரப்பினரை ஜூன் 19-ல் சந்திக்க மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

TMC split: Lok Sabha Speaker invites Abhishek Banerjee for meeting on June 19

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.