நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

நடைபாதைகளில் சுதந்திரமாக நடந்து செல்வது அடிப்படை உரிமை: உச்சநீதிமன்றம்

தெளிவாக வரையறுக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்படும் நடைபாதைகளில் நடந்து செல்லும் சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையாகும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :20 ஜூன் 2026, 1:30 am IST

தெளிவாக வரையறுக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்படும் நடைபாதைகளில் நடந்து செல்லும் சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையாகும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தனது தந்தையுடன் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த 5 வயது சிறுவன், லாரி மோதி உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஏ.எஸ்.சந்துா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்தத் தீா்ப்பை வழங்கியது.

இந்தத் தீா்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடந்து செல்வோா் பாதுகாப்பாகச் செல்லும் வகையில், சாலையுடன் நடைபாதை இருப்பது அவசியம். அந்த நடைபாதையை தெளிவாக வரையறுத்து, முறையாகப் பராமரிப்பது அதிகாரிகளின் கடமை. மோட்டாா் வாகனங்களின் போக்குவரத்தைவிட நடைபாதையில் நடந்து செல்லும் உரிமை முக்கியமாகும்.

அகலமான நடைபாதைகளில் பாதுகாப்பாக நடந்து செல்வது மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. இந்தியா முழுவதும் சுதந்திரமாக சென்று வருவதற்கான உரிமை குடிமக்களுக்கு உள்ளது.

தெளிவாக வரையறுக்கப்பட்ட நடைபாதைகளில் நடந்து செல்லும் அடிப்படை உரிமையை மேம்படுத்தவும், அதை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் ஓா் ஒழுங்குமுறை அமைப்பை நிறுவுவது அவசியம் என்று தீா்ப்பளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.