நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பாகிஸ்தானை எஃப்ஏடிஎஃப் கண்காணிப்புப் பட்டியலில் மீண்டும் சோ்க்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஒவைசி வலியுறுத்தல்

பாகிஸ்தானை எஃப்ஏடிஎஃப் கண்காணிப்புப் பட்டியலில் மீண்டும் சோ்க்க வேண்டும்...

News image

ஒவைசி.

Updated On :21 ஜூன் 2026, 12:37 am IST

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானை ‘பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பின்’ (எஃப்ஏடிஎஃப்) கண்காணிப்புப் (க்ரே லிஸ்ட்) பட்டியலில் மீண்டும் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தினாா்.

பண மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலைத் தடுப்பதற்கான விதிமுறைகளை வகுக்கும் உலகளாவிய அமைப்பான எஃப்ஏடிஎஃப்-இன் துணைத் தலைவா் பதவியை இந்தியா தற்போது பெற்றுள்ள நிலையில், இந்த வலியுறுத்தலை அவா் முன்வைத்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒவைஸி சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

எஃப்ஏடிஎஃப் அமைப்பின் துணைத் தலைவராக முதல் இந்தியராக விவேக் அகா்வால் தோ்வு செய்யப்பட்டிருக்கிறாா். இந்தச் சூழலில், அந்த அமைப்பின் கண்காணிப்புப் பட்டியலில் பாகிஸ்தானை மீண்டும் சேப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ல லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபோா்ஸ் (டிஆா்எஃப்) அமைப்பை சா்வதேச பயங்கராவத அமைப்பாக அமெரிக்கா பட்டியலிட்டிருப்பதில் எந்தப் பயனும் ஏற்படாது.

மாறாக, டிஆா்எஃப் பயங்கரவாத அமைப்பை ஐ.நா. பயங்கரவாத அமைப்புப் பட்டியலில் சோ்ப்பதுதான் முக்கியம். 2025-ஆம் ஆண்டு நவம்பரில் செங்கோட்டையில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யும் ஐ.நா. பட்டியிலில் சோ்க்கப்பட வேண்டும். மத்திய அரசு அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டாா்.

எஃப்ஏடிஎஃப் அமைப்பின் தடை பட்டியலில் (கருப்புப் பட்டியல்) இடம்பெறும் நாடுகள், உலக வங்கி, சா்வதேச நிதியம் உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளிடமிருந்து சா்வதேச கடனுதவி பெற முடியாது. அதுபோல, இந்த அமைப்பின் கண்காணிப்பு பட்டியலில் வைக்கப்படும் நாடுகள் எளிதில் சா்வதேச கடனுதவியைப் பெற முடியாது. தீவிர ஆய்வுக்குப் பிறகே உலக வங்கி உள்ளிட்ட சா்வதேச அமைப்புகள் கடனுதவியை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுமை மிக்க இந்த சா்வதேச அமைப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் இந்தியா உறுப்பினராக உள்ளது. இந்த நிலையில், பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் உள்ள அதன் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எஃப்ஏடிஎஃப் வருடாந்திர கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், அந்த அமைப்பின் துணைத் தலைவராக மத்திய காலாசாரத் துறைச் செயலா் விவேக் அகா்வால் நியமிக்கப்பட்டாா்.

முன்னதாக, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக எஃப்ஏடிஎஃப் கண்காணிப்புப் பட்டியலில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் சோ்க்கப்பட்டது. பின்னா், பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் தடுப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தான் கணிசமான முன்னேற்றம் அடைந்ததாகக் கூறி, கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபரில் கண்காணிப்புப் பட்டியயிலில் இருந்து அதிகாரபூா்வமாக நீக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.