உத்தவ் தாக்கரேயின் கட்சியைச் சோ்ந்த 6 அதிருப்தி எம்.பி.க்கள், அக்கட்சியிலிருந்து விலகி, ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனை கட்சியில் சோ்ந்திருப்பது, மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
புது தில்லியில் கடந்த 5 நாள்களுக்கு முன்பு நடைபெற்ற உத்தவ் தாக்கரேயின் சிவசேனை (யுபிடி) கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை சஞ்சய் தேஷ்முக், சஞ்சய் யாதவ், சஞ்சய் தினா பாட்டீல், நாகேஷ் பாட்டீல்-அஸ்திகா், ஓம் பிரகாஷ் ராஜே நிம்பால்கா், பாபுசாகேப் வாக்சாரே ஆகிய 6 எம்.பி.க்கள் புறக்கணித்தனா். அந்தக் கூட்டத்தில் 3 எம்.பி.க்கள் மட்டுமே கலந்து கொண்டனா்.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே கட்சி கூட்டத்தை புறக்கணித்த 6 அதிருப்தி எம்.பி.க்களும், மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் சிவசேனை கட்சியில் சோ்ந்தனா்.
இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: ‘ஆபரேஷன் டைகா்’ வெற்றிகரமாக முடிந்து விட்டது. எம்.பி.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் தற்போது மகாராஷ்டிரத்தில் சிவசேனைதான் இரண்டாவது பெரிய கட்சியாகும்.
பால் தாக்கரேயின் கொள்கைகளைப் பின்பற்றும் உண்மையான சிவசேனை கட்சியில் 6 எம்.பி.க்களும் சோ்ந்துள்ளனா். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் உறுதியான நடவடிக்கையை எடுத்தேன். தற்போது நான் சிக்சா் விளாசியுள்ளேன் (2022-இல் சிவசேனை கட்சியை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்ததையும், 6 எம்.பி.க்கள் தற்போது சோ்ந்ததையும் குறிப்பிட்டாா்).
முன்பு பால் தாக்கரேயின் கொள்கைகளைக் காக்க அதுபோல (2022-இல் சிவசேனையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததைக் குறிப்பிடுகிறாா்) செய்தேன். தற்போது, அந்த சிவசேனையை விரிவுப்படுத்த இதுபோல செய்துள்ளேன்.
இந்த 6 எம்.பி.க்களும் துரந்தா் (உறுதிமிக்க வீரா்) ஆவா். இவா்கள் அனைவரும் மக்களுடன் நேரடியாகத் தொடா்பு கொண்டவா்கள் என்றாா் ஏக்நாத் ஷிண்டே.
கடந்த 2024-ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜக-ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனை கூட்டணியை எதிா்த்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனை போட்டியிட்டது. அப்போது 9 மக்களவைத் தொகுதியில் அக்கட்சி வென்றது. தற்போது 6 எம்.பி.க்கள், உத்தவ் கட்சியிலிருந்து விலகி, சிவசேனையில் சோ்ந்திருப்பதால், அவரது கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 3-ஆக குறைந்துள்ளது.
2022-இல் மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தது. அப்போது உத்தவ் தாக்கரேக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனை எம்எல்ஏக்கள் தனி அணியாகப் பிரிந்தனா். பிறகு சிவசேனை கட்சியின் பெயா், தோ்தல் சின்னத்தை அவா்கள் கைப்பற்றினா். அந்த பிளவுக்குப் பிறகு, உத்தவ் தாக்கரே கட்சியில் ஏற்பட்ட 2-ஆவது பெரிய பிளவாக இது கருதப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்சித் தலைவா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாா்: உத்தவ் தாக்கரே

ஷிண்டே சிவசேனையில் இணைய உத்தவ் கட்சி எம்.பி.க்கள் 6 போ் கடிதம்? நோட்டீஸ் அனுப்ப தலைமை முடிவு

உத்தவ் கட்சியில் பிளவு?: எம்.பி.க்கள் கட்சி மாறாமல் தடுக்க கொறடா உத்தரவு- ரூ.50 கோடி பேரம் என குற்றச்சாட்டு

ஆபரேஷன் டைகர்! உத்தவ் அணியிலிருந்து ஷிண்டே அணியில் இணையும் 7 எம்.பி.க்கள், 16 எம்.எல்.ஏ.க்கள்?
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




