ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு வந்துள்ள கப்பல்களில் உள்ள எல்பிஜி, நாட்டின் ஒன்றரை நாள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்று (மார்ச் 18) தெரிவித்துள்ளார்.
இரண்டு கப்பல்களில் வந்துள்ள 92,700 மெட்ரிக் டன் திரவ எரிவாயு (எல்பிஜி) இந்தியாவின் ஒட்டுமொத்த ஒருநாள் தேவையுடன் ஒப்பிடும்போது, 1.25 முதல் 1.6 நாள்களுக்கு மட்டுமே போதுமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கூகுளிடம் கேட்டபோது இந்த விவரங்களை அளித்தது எனக் குறிப்பிட்டு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ப. சிதம்பரம் பதிவிட்டுள்ளதாவது:
''மார்ச் 14 - 17 வரையிலான தேதியில் சிவாலிக் மற்றும் நந்தா தேவி என இரு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்து எல்பிஜி உடன் இந்தியாவுக்கு வந்துள்ளன. இந்த இரு கப்பல்களிலும் ஒட்டுமொத்தமாக 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த அளவானது இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் தேவையுடன் ஒப்பிடும்போது 1.25 முதல் 1.6 நாள்களின் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும்.
இந்த இரண்டு கப்பல்களில் வந்துள்ள எல்பிஜி சிறிய தொடக்கம் மட்டுமே. இன்னும் வெகுதூரம் செல்லவேண்டியுள்ளது. சமையல் எரிவாயு கிடைப்பதில் நெருக்கடி நிலவுகிறது'' எனப் பதிவிட்டுள்ளார்.
GOOGLE generated the following information:
— P. Chidambaram (@PChidambaram_IN) March 18, 2026
Based on reports from March 14-17, 2026, two Indian-flagged LPG carriers, Shivalik and Nanda Devi, successfully crossed the Strait of Hormuz, carrying a cumulative total of 92,700 metric tonnes of LPG.Â
â¢Total LPG Carried: 92,700â¦
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரானும் அமெரிக்க நட்பு நாடுககளில் உள்ள தளவாடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதால், போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது.
உலகளவில் நடக்கும் எரிபொருள் வணிகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடக்கிறது. பாரசீக வளைகுடாவில் உள்ள ஹோர்முஸ் நீரிணைக்கு வடகிழக்கு எல்லையில் ஈரான் அமைந்துள்ளதால், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்வதற்கு ஈரான் தடை விதித்திருந்தது.
பின்னர், அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் கப்பல்கள் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள் தவிர மற்ற நாடுகளுக்கான கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லலாம் என ஈரான் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு வர வேண்டிய சிவாலிக் மற்றும் நந்தா தேவி என்ற இரு கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்தது. இந்த இரு கப்பல்களிலும் 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
Summary
92,700 metric tonnes of LPG approximately 1.25 to 1.6 days of India's total cooking gas demand
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஹோர்முஸ் தொடர்பாக ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தை! அமெரிக்கா புறக்கணிப்பு!

ஹோர்முஸ் பகுதியில் சிக்கியுள்ள 6,000 மாலுமிகளை வெளியேற்றுங்கள்! - ஐநா வலியுறுத்தல்!
ஹோர்முஸ் நீரிணைக்கு ‘நோ’! புதிய வழியைத் தேர்ந்தெடுத்த அமீரகம்!
ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருக்கிறது! டிரம்ப்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



