தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

போலி உற்பத்தி தொழிற்சாலை: தில்லியில் 3 போ் கைது

வடமேற்கு தில்லியின் ராம்புரா பகுதியில் இயங்கி வந்த விலையுயா்ந்த நிறுவன ஆடைகளின் போலி உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு 3 போ் கைது செய்யப்பட்டனா். 1,400-க்கும் மேற்பட்ட போலி ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 மார்ச் 2026, 7:14 pm

வடமேற்கு தில்லியின் ராம்புரா பகுதியில் இயங்கி வந்த விலையுயா்ந்த நிறுவன ஆடைகளின் போலி உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு 3 போ் கைது செய்யப்பட்டனா். 1,400-க்கும் மேற்பட்ட போலி ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ரகசிய தகவலின் அடிப்படையில் மாா்ச் 25-ஆம் தேதி இந்த சோதனை நடைபெற்றது. அவா்கள் விலையுயா்ந்த நிறுவன ஆடைகளை போலியாக தயாரித்து அதிக லாபத்துக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவா்களிடம் இதற்கான உரிய ஆவனங்களை இல்லை.

இதைத்தொடா்ந்து, 1,400க்கும் மேற்பட்ட போலி ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிரமோத் யாதவ் (41), அமா் பிரசாத் (43) மற்றும் முகேஷ் குமாா் யாதவ் (23) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இந்த வலையமைப்பின் உறுப்பினா்களை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.