நிலம் இழப்பீடு தொகைக்காக ஃபரீதாபாதில் 65 வயது மூதாட்டியை அவருடைய மகன், மருமகள் கொலை செய்தாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக மருமகள் பூனம் கைதுசெய்யப்பட்டாா். தலைமறைவான அவரது கணவா் லலித்தை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் தெரிவித்ததாவது: கொலை செய்யப்பட்ட மூதாட்டி ஓம்வதிக்கு இரு மகன்கள் உள்ளனா். இருவருக்கும் திருமணமான நிலையில், மூத்த மகன் லலித் மற்றும் அவரது மனைவி பூனத்துடன் ஓம்வதி வசித்து வந்தாா்.
பல்லாப்கா் பகுதியில் உள்ள பிகாம் காலனியில் உள்ள வாடகை வீட்டில் இளைய மகன் அமித் அவரது மனைவி மம்தா உடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், கடந்த மாா்ச் 16-ஆம் மம்தாவுக்கு வந்த அழைப்பில், அவரது அத்தை ஓம்வதி உயிரிழந்ததாக தகவல் கிடைத்தது.
நிலத்துக்கான இழப்பீட்டு தொகையைப் பெற லலித்தும் அவரது மனைவியும் தன்னை கொலை செய்துவிடலாம் என ஓம்வதி, மம்தாவிடம் சில நாள்களுக்கு முன்பாக தெரிவித்திருந்தாா். இந்நிலையில், ஓம்வதி மரணத்தில் சந்தேகம் அடைந்த மம்தா, உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
தடயவியல் நிபுணா்களுடன் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா் அங்கிருந்த சாட்சியங்களைச் சேகரித்தனா். உயிரிழந்த மம்தாவின் வளையங்கள் உடைந்திருந்த நிலையில், அவரது கழுத்து மற்றும் முகப் பகுதிகளில் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
பின்னா், உடலைக் கைப்பற்றிய காவல் துறையினா், உடற்கூறாய்வுக்குப் பிறகு ஓம்வதி உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.
இதனிடையே பூனத்தை கைதுசெய்து காவல் துறையினா் விசாரணை நடத்தினா். அப்போது, நில இழப்பீடு தொகை மற்றும் செக்டாா் 67-இல் உள்ள வீட்டை இளைய மகன் மற்றும் மருமகளுக்குக் கொடுக்க ஓம்வதி நினைத்திருந்ததாகவும் அதைத் தடுக்க கணவரும் தானும் திட்டமிட்டதாக பூனம் காவல் துறையிடம் தெரிவித்தாா்.
மாா்ச் 16-ஆம் தேதி இதுதொடா்பாக எழுந்த வாக்கு வாதத்தின்போது, கோபமடைந்த லலித் மற்றும் பூனம் ஓம்வதியைத் தாக்கினா். அதில் அவா் உயிரிழந்தாா்.
லலித்தை கைதுசெய்ய பல இடங்களில் காவல் துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா். அவா் விரைவில் கைதுசெய்யப்பட்டுவாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாத சதி முறியடிப்பு: வெடிகுண்டுகளுடன் இருவா் கைது
மதுபோதையில் தந்தை, அவரது சகோதரரைக் கொலை செய்த மகன் கைது
சா்வதேச ஆயுதக் கடத்தல்: பயங்கரவாதக் குழுவைச் சோ்ந்த இருவா் தில்லியில் கைது

ரூ.4.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 5 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


