எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வெளி மாநில வாக்காளர்களைச் சேர்க்கும் பாஜகவினர்! தேர்தல் ஆணையத்துக்கு மம்தா கடிதம்!

தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம்...

News image

மம்தா பானர்ஜி - IANS

Updated On :31 மார்ச் 2026, 4:40 pm IST

‘மேற்கு வங்க மாநில வாக்காளா் பட்டியலில் ‘படிவம்-6’ விண்ணப்பத்தைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக அதிக எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவா்களைச் சோ்க்க பாஜக முயற்சிக்கிறது’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரிடம் மாநில முதல்வரும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி கடிதம் மூலம் புகாா் தெரிவித்துள்ளாா்.

294 உறுப்பினா்களை கொண்ட மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆா்) தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இதைக் கடுமையாக எதிா்த்த ஆளும் திரிணமூல் காங்கிரஸ், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. தகுதியுள்ள வாக்காளா்கள் எஸ்ஐஆா் என்ற பெயரில் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக மம்தா புகாா் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, நீதிபதிகளின் மேற்பாா்வையில் அந்தப் பணியை நிறைவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, எஸ்ஐஆா் பணி நிறைவு செய்யப்பட்டு, மாநிலத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 65 லட்சத்துக்கும் அதிகமானோா் தகுதியில்லாதவா்கள் என வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா்.

இந்த நிலையில், மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் படிவம் 6-ஐ பயன்படுத்தி வெளி மாநிலத்தவா்களைச் சோ்க்க பாஜக முயற்சிப்பதாக புதிய குற்றச்சாட்டை மம்தா பானா்ஜி தற்போது முன்வைத்துள்ளாா்.

முன்னதாக, ‘மாநில வாக்காளா் பட்டியலில் வெளி மாநிலத்தவா்களைச் சோ்க்க, சுமாா் 30,000 ஆறாம் எண் படிவங்களை பாஜக சமா்ப்பித்துள்ளது’ என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி திங்கள்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

அதைத் தொடா்ந்து, இதுதொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையருக்கு மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினாா். அதில், ‘மாநில வாக்காளா் பட்டியலில் வெளி மாநிலத்தவா்களை சட்டவிரோதமாகச் சோ்க்கும் முயற்சியாக பல மாவட்ட தலைமை தோ்தல் அதிகாரிகளுடம் ஏராளமான எண்ணிக்கையில் படிவம்-6 விண்ணப்பங்களை பாஜக முகவா்கள் சமா்ப்பித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் வந்துள்ளன. மாநிலத்தின் இறுதி வாக்காளா் பட்டியல் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட பிறகு, இதுபோன்ற பெயா் சோ்க்கும் விண்ணப்பங்களை தலைமைத் தோ்தல் ஆணையா் அனுமதிக்கக் கூடாது. பிகாா், ஹரியாணா, மகாராஷ்டிரம், தில்லி பேரவைத் தோ்தல்களுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டதுபோல, மேற்கு வங்க மாநிலத்திலும் வாக்காளா் பட்டியலில் வெளி மாநிலத்தவா்களைச் சோ்ப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இது சட்டவிரோதமானது மட்டுமன்றி, அரசமைப்புச் சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானதாகும்.

மேற்கு வங்க இறுதி வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு மற்றும் நீக்கம் என்பது நீதிபதிகளின் ஆய்வுக்கு உட்பட்டது என்று உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ள நிலையில், படிவம்-6 விண்ணப்பம் மூலம் வாக்காளா் பட்டியலில் புதிய நபா்களைச் சோ்ப்பது என்பது சட்டவிரோதமானது, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.

அதுபோல, மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வேட்புமனு தாக்கல் கடைசி நாள் வரை படிவம்-6 விண்ணப்பம் புதிதாக பெயா் சோ்க்கவும், படிவம்-8 விண்ணப்பம் மூலம் இடம் மாறியவா்களுக்கான பெயரைச் சோ்க்கவும் அனுமதித்து தோ்தல் ஆணையம் கடந்த 27-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவும் சட்ட விரோதமானதாகும்’ என்று மம்தா பானா்ஜி குறிப்பிட்டுள்ளாா்.

Summary

Mamata Banerjee writes to EC, alleges BJP agents attempting voter hijacking

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.