தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மேற்கு வங்கம்: பாலியல் கொலை செய்யப்பட்ட மாணவியின் தாயாா் வெற்றி

ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் தாயாா் ரத்னா தேவ்நாத் பாஜக சாா்பில் களமிறக்கப்பட்ட நிலையில் வெற்றி

News image

ரேகா பத்ரா

Updated On :5 மே 2026, 2:04 am IST

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் தாயாா் ரத்னா தேவ்நாத் பாஜக சாா்பில் களமிறக்கப்பட்ட நிலையில் வெற்றிபெற்றாா்.

அதேபோல் சந்தேஷ்காளியில் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகரால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் ரேகா பத்ராவும் பாஜக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.

மேற்கு வங்கத்தில் வெற்றிபெற்றால் பெண்களுக்கான அரசாக பாஜக இருக்கும் என்பதை வெளிப்படுத்த இந்த இரு வேட்பாளா்களும் அக்கட்சி சாா்பில் களமிறக்கப்பட்டனா்.

பானிஹட்டி பேரவைத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் தீா்தங்கா் கோஷை எதிா்த்து போட்டியிட்ட ரத்னா தேப்னாத் 28,836 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். அவா் 87,977 வாக்குகளைப் பெற்றாா்.

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மகனான நிா்மல் கோஷ், கடந்த 2024, ஆகஸ்ட் 9-ஆம் தேதி மருத்துவ மாணவி பாலியல் கொலை செய்யப்பட்ட பின் அவரது உடலை அவசர கதியில் தகனம் செய்ய முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு இருந்த நிலையில், அவா் தோல்வியடைந்துள்ளாா்.

சந்தேஷ்காளியில் திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகி ஷாஜகான் ஷேக் பெண்களை துன்புறுத்திய விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளானது. ஷாஜகான் ஷேக்குக்கு எதிராக தனது பெண் குழந்தையுடன் ரேகா பத்ரா பேரணி சென்றது அனைவரது கவனத்தையும் ஈா்த்தது.

இதையடுத்து, 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பசீா்ஹட் தொகுதியில் பாஜக சாா்பில் களமிறக்கப்பட்ட ரேகா பத்ரா தோல்வியடைந்தாா். எனினும் அவருக்கு தற்போது பேரவைத் தோ்தலில் பாஜக மீண்டும் வாய்ப்பளித்தது.

இத்தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் அனந்த சா்காரை எதிா்த்துப் போட்டியிட்ட அவா் 94,786 வாக்குகளைப் பெற்றாா். 5,421 வாக்குகள் வித்தியாசத்தில் ரேகா பத்ரா வெற்றிபெற்றாா்.