கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் பதவி விலகல்!

புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் பதவி விலகியது குறித்து...

News image

புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம்... - கோப்புப் படம் | ENS

Updated On :7 மே 2026, 4:18 pm IST

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைவர் வைத்திலிங்கம் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 16 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஊசுடு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட புதுவை காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான வைத்திலிங்கம், என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், தற்போதைய முதல்வருமான என். ரங்கசாமியிடம் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில், தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறி, அக்கட்சியின் தலைமைக்கு இன்று (மே 7) வைத்திலிங்கம் தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பிவைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட வைத்திலிங்கம் புதுச்சேரி மக்களவை உறுப்பினராகப் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Puducherry Congress Party President Vaithilingam has resigned from his post.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.