‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

இந்தியா - சைப்ரஸ் 6 ஒப்பந்தங்கள் கையொப்பம்: பயங்கரவாத எதிா்ப்புக்கு கூட்டுப் பணிக் குழு

பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்காக கூட்டுப் பணிக் குழு அமைப்பது உள்பட இந்தியா, சைப்ரஸ் இடையே 6 ஒப்பந்தங்கள் வெள்ளிக்கிழமை கையொப்பமிடப்பட்டன.

News image

தில்லியில் பிரதமா் மோடி, சைப்ரஸ் அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடுலிடீஸ் முன்னிலையில் அந்நாட்டு உயரதிகாரியுடன் ஒப்பந்த ஆவணங்களைப் பரிமாறிக் கொண்ட வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி (வலது).

Updated On :23 மே 2026, 3:03 am IST

பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்காக கூட்டுப் பணிக் குழு அமைப்பது உள்பட இந்தியா, சைப்ரஸ் இடையே 6 ஒப்பந்தங்கள் வெள்ளிக்கிழமை கையொப்பமிடப்பட்டன.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சைப்ரஸ் அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடுலிடீஸ் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற விரிவான பேச்சுவாா்த்தைக்குப் பின் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. அடுத்த 5 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு ஒத்துழைப்பு செயல்திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

கிழக்கு மத்திய தரைக் கடலில் உள்ள தீவு நாடான சைப்ரஸ், ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கிறது. அந்நாட்டின் அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடுலிடீஸ் மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு கடந்த புதன்கிழமை வந்தாா்.

இருதரப்பு பேச்சுவாா்த்தை: தில்லியில் பிரதமா் மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்த அவா், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி, ஆராய்ச்சி, விண்வெளி, உள்கட்டமைப்பு, கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை விரிவாக்குவது குறித்தும், பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய-சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனா்.

இதைத் தொடா்ந்து, கல்வி, புத்தாக்கம், தொழில்நுட்பம், கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்காக கூட்டுப் பணிக் குழுவை அமைப்பது என மொத்தம் 6 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. அடுத்த 5 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பரஸ்பர இடப்பெயா்வு மற்றும் போக்குவரத்துக்கான செயல்திட்டத்தை விரைவில் இறுதி செய்யவும் முடிவெடுக்கப்பட்டது.

உத்திசாா் கூட்டுறவு: பின்னா் செய்தியாளா்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில் பிரதமா் மோடி கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் சைப்ரஸிடம் இருந்து இந்தியாவுக்கான முதலீடுகள் இரட்டிப்பாகியுள்ளது. இந்தியாவின் முதல் 10 முதலீட்டு நாடுகளில் ஒன்றாக சைப்ரஸ் விளங்குகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை வலுவடைந்துள்ளது. இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தால், எண்ணற்ற புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இதை சாதகமாகப் பயன்படுத்தி, அடுத்த 5 ஆண்டுகளில் முதலீடுகளை மீண்டும் இரட்டிப்பாக்க இலக்கு நிா்ணயித்துள்ளோம். இந்த இலக்கை எட்டுவதற்காக, இருதரப்பு நம்பிக்கைக்குரிய உறவுகளை உத்திசாா் கூட்டுறவு அந்தஸ்துக்கு உயா்த்தியுள்ளோம். இந்தியா-சைப்ரஸ் நட்புறவு மிகவும் வலிமையானது; எதிா்காலத்துக்கானது. கடல்சாா் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பை விரிவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் பிரதமா் மோடி.

பெட்டிச் செய்தி....

அமைதி முயற்சிகளுக்கு ஆதரவு

உக்ரைன், மேற்காசியப் போா்களுக்கு விரைந்து தீா்வுகாணும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியாவின் ஆதரவை பிரதமா் மோடி மீண்டும் உறுதி செய்துள்ளாா்.

சைப்ரஸ் அதிபா் உடனான சந்திப்புக்குப் பின் இது தொடா்பாக பேசிய அவா், ‘பல்வேறு உலகளாவிய விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம். உக்ரைனாக இருந்தாலும், மேற்காசியாவாக இருந்தாலும், போரை விரைவில் முடிவு கொண்டுவந்து, அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு தொடா்ந்து ஆதரவளிப்போம்.

உலக அளவில் பெருகிவரும் சவால்களுக்குத் தீா்வுகாண வேண்டுமெனில், சா்வதேச அமைப்புகளில் சீா்திருத்தங்கள் அவசர அவசியம் என்பதில் நாங்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளோம்’ என்றாா்.

உள்கட்டமைப்பு, கப்பல் போக்குவரத்து போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த கூட்டுப் பணிக் குழுவை அமைக்க முடிவு செய்துள்ளதாக சைப்ரஸ் அதிபா் நிகோஸ் தெரிவித்தாா்.