நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி! மே-4 ஆம் தேதி நடந்தது என்ன? மாணிக்கம் தாகூர் பரபரப்பு தகவல் திருச்சி: உயிரிழந்த செவிலியர் மாணவி குடும்பத்துக்கு அரசு உதவி பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!
/

காணாமல் போன மருத்துவ மாணவர், மும்பை வீதிகளில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தபோது மீட்பு!

47 நாட்களாகக் காணாமல் போன மருத்துவக் கல்லூரி மாணவர், மும்பை வீதிகளில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தபோது மீட்கப்பட்டுள்ளார்.

News image

மாதிரிப் படம் - ENS

Updated On :24 மே 2026, 4:56 pm IST

47 நாட்களாகக் காணாமல் போன மருத்துவக் கல்லூரி மாணவர், மும்பை வீதிகளில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தபோது மீட்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், நாந்தேட்டைச் சேர்ந்த அபய் சுரேஷ் பெல்கோனி(25). இவர் ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சை இளங்கலை (பிஎச்எம்எஸ்) மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி ஜல்கானில் உள்ள தனது கல்லூரிக்குச் செல்லும் வழியில் காணாமல் போனார்.

ரயில் பயணத்தின் போது, அபய் தனது மொபைல் போன் மற்றும் அடையாள ஆவணங்கள் உட்பட அனைத்து உடமைகளையும் இழந்துள்ளார். கையில் பணமோ, தொடர்புகொள்வதற்கான வழியோ இல்லாமல் மும்பையில் தவித்த அவர், உயிர் பிழைப்பதற்காகப் பிச்சையெடுக்கத் தொடங்கியுள்ளார்.

அபய் ஏப்ரல் 6-ஆம் தேதி, ரயில்வே வியாபாரி ஒருவரின் மொபைலை பயன்படுத்தி தனது குடும்பத்தினரை தொடர்புகொண்டுள்ளார். அதன் பிறகு, குடும்பத்தினர் அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இருப்பினும், அவர் தனது சூழ்நிலையை விளக்குவதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

பின்னர் அந்த வியாபாரி, இளைஞர் அங்கிருந்து கிளம்பிவிட்டதாகக் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். நீண்ட தேடலுக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் மே 16ஆம் தேதி நாந்தேட் காவல் நிலையத்தில் ஆள் காணவில்லை என்று புகார் அளித்தனர்.

இந்த நிலையில் 47 நாட்களாகக் காணாமல் போயிருந்த மருத்துவக் கல்லூரி மாணவர் மீட்கப்பட்டுள்ளார். மனநலப் பாதிப்பால் மும்பை வீதிகளில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த நாந்தேட்டைச் சேர்ந்த அந்த இளைஞர், தற்போது அவரது குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

Summary

The Mumbai police's anti-begging drive led to the rescue of a 25-year-old medical student from Nanded, who was suffering from mental health issues and begging on the streets after going missing for 47 days, officials said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.