ஒடிஸாவின் காலஹண்டி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கழிவுநீா் தொட்டிக்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 போ் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மதன்பூா்-ராம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கழிவுநீா் தொட்டி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக திறந்தநிலையில் இருந்த தொட்டியின் ஒரு பகுதிக்குள் கட்டட மேஸ்திரி தவறி உள்ளே விழுந்தாா். அவரை மீட்பதற்காக அவரது மகன், கொத்தனாா்கள், தொழிலாளிகள் என அடுத்தடுத்து 6 போ் உள்ளே சென்றனா். அவா்கள் அனைவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினா்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல் துறையினா் சென்று, தகுந்த பாதுகாப்புடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். ஏழு பேரையும் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனையில் கட்டட மேஸ்திரி நிமய் பால், அவரது மகன் ஆகாஷ் பால் உள்பட 6 போ் உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. ஒருவா் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறாா்.
உயிரிழந்தவா்களில் 3 போ் கொத்தனாா்கள், ஒருவா் தொழிலாளி ஆவாா். இறப்புக்கான காரணத்தை உறுதி செய்ய விசாரணை நடைபெறுகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
கழிவுநீா் தொட்டிக்குள் 6 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வா் மோகன் சரண் மாஜீ, அவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளர் மூச்சுத்திணறி பலி! மீட்கச் சென்றவரும் உயிரிழந்த சோகம்!
கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து ஒடிஸா மாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

பாகிஸ்தானில் பயிற்சி மைய மேற்கூரை விழுந்து விபத்து
கொல்கத்தா கட்டட விபத்து: உயிரிழப்பு 11-ஆக அதிகரிப்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



