ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

கர்நாடகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சித்தராமையா தலைமையிலான... பிரியங்க் கார்கே கூறியதென்ன?

கர்நாடகத்தில் அடுத்து அமையவிருக்கும் ஆட்சி குறித்து பிரியங்க் கார்கே தெரிவித்தது தொடர்பாக...

Priyank Kharge

காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கே. - படம் - ஏஎன்ஐ

Published On :30 மே 2026, 12:59 pm IST

கர்நாடகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற பணிகளை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று முன்னாள் கர்நாடக அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பிரியங்க் கார்கே சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது.

இந்தச் சூழலில், இருவரையும் சமாதானப்படுத்திய காங்கிரஸ் மேலிடம், சுழற்சி முறையில் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகால முதல்வர் பதவிவகிக்கும் சமரச திட்டத்தை ஏற்று, சித்தராமையா முதல்வரானார்.

இரண்டரை ஆண்டுகளுக்கு மேலானதைத் தொடர்ந்து, சித்த ராமையாவை காங்கிரஸ் தலைமை ராஜிநாமா செய்ய உத்தரவிட்டது. அதன்படி, அவர் ராஜிநாமா செய்ததால் அடுத்த ஆட்சியை அமைப்பது குறித்து கர்நாடக காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு பெங்களூரில் உள்ள விதான சவுதாவில் நடைபெறுகிறது. 

இது குறித்து பிரியங்க் கார்கே தெரிவித்ததாவது:

காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு கூட்டம் நடைபெறுவது இது முதல்முறை அல்ல. இந்தக் குழு முதலில் சட்டப்பேரவைத் தலைவரை முடிவு செய்யும். அந்தத் தகவல் ஆளுநருக்கு அனுப்பப்படும். அதன் பிறகு, என்ன நடக்கும் என்ற அனைத்தும் சட்டப்பேரவைக் குழுவிடமே விடப்படும்.

முதல்வர் ராஜிநாமா செய்துவிட்டார். அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. அடுத்த ஆட்சியில் யார் இடம் பெறுவார் என்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்ய வேண்டும். ஆனால், யார் ஆட்சிக்கு வந்தாலும், சித்தராமையா தலைமையில் நடைபெற்ற பொருளாதார மற்றும் சமூகப் பணிகளை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று தெரிவித்தார்.

Summary

Former Karnataka Minister and Congress leader Priyank Kharge stated on Saturday that, regardless of who comes to power in Karnataka, We will continue to implement the works carried out under the leadership of Siddaramaiah.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.