பிரேக் சிஸ்டம் வேலை செய்யவில்லை! அஸ்ஸாம் ரயில் விபத்துக்கு முன் எடுக்கப்பட்ட விடியோ!
அஸ்ஸாம் ரயில் தடம் புரள்வதற்கு முன் எடுக்கப்பட்ட விடியோ...

அஸ்ஸாம் ரயில் விபத்து - PTI
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள டிகாரு ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயில் இன்று காலை தடம் புரண்டதற்கு முன்னதாக என்ஜினில் இருந்து எடுக்கப்பட்ட விடியோ வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றது.
மிசோரம் மாநிலம் சைராங்கில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த கொல்கத்தா-சைராங் விரைவு பயணிகள் ரயில்(ரயில் எண்: 13125), புதன்கிழமை காலை 6.54 மணியளவில், குவஹாத்திக்கு அருகில் உள்ள காம்ரூப் மாவட்டம் டிகாரு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ரயிலின் என்ஜின் உள்பட 6 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், இதுவரை உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு, அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், ரயில் தடம் புரண்டதற்கு சில நொடிகளுக்கு முன்னதாக என்ஜின் கேபினில் இருந்து எடுக்கப்பட்ட பதறவைக்கு காணொலி இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த காணொலியில், ரயிலின் அவசரகால பிரேக் சிஸ்டம் எதுவும் வேலை செய்யவில்லை என்றும், சிவப்பு சிக்னல் போடப்பட்டும் ரயிலை நிறுத்த முடியவில்லை என்றும் ரயில் ஓட்டுநர் பதற்றத்துடன் தெரிவிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, சில நொடிகளில் பலத்த சப்தத்துடன் ரயில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து தொடர்பாக வடகிழக்கு எல்லை ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
Visual evidence confirms that despite applying the Loco Brake, Train Brake, and Emergency Brakes simultaneously, the train failed to stop prior to the Assam derailment earlier today. Critical questions emerge over technical failure and track-brake. #Assam #TrainAccident pic.twitter.com/OvcGejNgbc
— Shivwil (@Shivwiley) November 11, 2026
Summary
Brake system not working! Video captured before the train accident in Assam!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


