இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு... முதன்முறையாக மனம் திறந்தார் சோனியா! சுயசரிதை புத்தகத்தில்சென்னையில் நேற்று மட்டும் 147 ரெளடிகள் கைது!ஐபிஎல் டிரேடிங்! பஞ்சாப் கிங்ஸில் இணைந்தார் ஹார்திக் பாண்டியா! மும்பையில் அர்ஷ்தீப்!மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! நாளை (நவ. 12) இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

'பாயி தூஜ்' பண்டிகை: மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து

பாய் தூஜ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்து...

PM greets people on Bhai Dooj

பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப்படம்

Updated On :

புது தில்லி: 'பாயி தூஜ்' பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சகோதர, சகோதரிகளுக்கு இடையிலான ஆழமான பிணைப்பின் இனிமையையும் அன்பையும் இந்தப் பண்டிகை உணர்த்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

இந்த நன்னாளில் நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய 'பாயி தூஜ்' நல்வாழ்த்துகள்.

இந்த மங்கலகரமான நாளில், அனைவரும் மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் இருக்க வாழ்த்துகிறேன்," என்று பிரதமர் மோடி ஹிந்தியில் பதிவிட்டுள்ளார்.

"இந்த புனிதமான பண்டிகை, சகோதர, சகோதரிகளுக்கு இடையிலான அன்பான மற்றும் ஆழமான பிணைப்பின் இனிமையையும் அரவணைப்பையும் உணர்த்துகிறது" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பாய் தூஜ் பண்டிகையானது ரக்ஷா பந்தனைப் போன்றது; தீபாவளி பண்டிகையின் நிறைவு நாளில், சகோதர, சகோதரிகளுக்கு இடையே உள்ள புனிதமான உறவைக் கொண்டாடும் ஒரு பண்டிகையாகும். இதில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் நூல் கட்டி, உடன்பிறப்புகளுக்கு இடையிலான புனிதமான பிணைப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

பாய் தூஜ் நாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் நெற்றியில் 'திலகம்' இட்டு ஆரத்தி எடுப்பார்கள். இது அன்பின் அடையாளமாகவும், அவர்களின் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்விற்கான பிரார்த்தனையாகவும் கருதப்படுகிறது.

சகோதரர்கள் தங்களின் சகோதரிகளை வீட்டிற்கு விருந்துக்கு அழைப்படுவர். சடங்குகளுக்குப் பிறகு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு அன்பளிப்புகளை வழங்குவார்கள்.

Wishing a very Happy Bhai Dooj to all my family members across the nation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.