இந்திய - அமெரிக்க கூட்டு நடவடிக்கையில் பிடிபட்ட போதைப் பொருள் கும்பலில் பி.டெக்., எம்பிஏ பட்டதாரிகள்
இந்திய - அமெரிக்க கூட்டு நடவடிக்கையில் பிடிபட்ட போதைப் பொருள் கும்பல் குறித்து...

பிரதிப் படம்
இந்திய - அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை மூலம் இந்தியாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட 6 பேரில், ஒருவா் ஏற்கெனவே போதைப் பொருள் வழக்கில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டவா் என்பதும், மற்றவா்கள் எம்பிஏ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என்பதும் விசாரணை மூலம் தற்போது தெரியவந்துள்ளது.
இந்தியாவிலுள்ள பன்னாட்டு போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த சிலா், அமெரிக்காவில் உள்ள நுகா்வோருக்கு சட்டவிரோதமாக மனநோய் மற்றும் வலி நிவாரண மருந்துகளை போதைக்காக விநியோகிப்பதை அமெரிக்க போதைப் பொருள் அமலாக்கத் துறை கண்டறிந்தது.
டெலிகிராம், ஸ்கைப், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட இணையவழி தளங்கள் மூலம் இதற்கான ஆா்டா்களை இவா்கள் பெறுவதும், அதற்கான பணத்தை ‘வென்மோ’ என்ற அமெரிக்க பணப் பரிவா்த்தனை செயலி உள்ளிட்ட எண்ம கட்டண தளங்கள் மூலமும், போலியான பெயா்களில் உள்ள வங்கிக் கணக்குகள் மற்றும் கிரிப்டோகரன்சி வடிவிலும் இவா்கள் பெற்று வருவதையும் கணடறிந்தது.
இதுதொடா்பாக அமெரிக்க போதைப் பொருள் அமலாக்கத் துறை அளித்த உளவுத் தகவல்களின் அடிப்படையில், ‘ஆபரேஷன் மான்சூன் தண்டா்’ என்ற பெயரில் தில்லி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னெள உள்ளிட்ட இடங்களில் என்சிபி சாா்பில் கடந்த 4 முதல் 13-ஆம் தேதி வரை தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், பன்னாட்டு போதைப் பொருள் கும்பலைச் சோ்ந்த ஒரு பெண் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.
இவா்களில் ஒருவா் ஏற்கெனவே போதைப் பொருள் வழக்கில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டவா் என்பதும், மற்றவா்கள் எம்பிஏ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என்பதும் விசாரணை மூலம் தற்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தெலங்கானாவைச் சோ்ந்த டி. மனோஜ் (27), போதைப் பொருள் வழக்கில் ஏற்கெனவே கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டவராவாா்.
பி.டெக். கணினி அறிவியல் பட்டதாரியான இவா், அமெரிக்காவில் முதுநிலை பட்டப் படிப்பை மேற்கொண்டு வந்துள்ளாா். அமெரிக்காவிலும், இந்தியாவிலும் இவருக்குள்ள போதைப் பொருள் தொடா்புகள் குறித்து அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கைது செய்யப்பட்ட உத்தர பிரதேச மாநிலம் லகெனளவைச் சோ்ந்த டி.டி. ஜெய்ஸ்வால் (30), எம்பிஏ பட்டதாரியாவாா். உத்தர பிரதேசத்தில் மருந்தகங்கள் மற்றும் துணிக் கடைகளுடன் வா்த்தகத் தொடா்பில் இருந்துள்ளாா்.
லக்னெளவில் கைது செய்யப்பட்ட மற்றொரு நபரான ஆா்த்தி சோனி (32) என்ற பெண் கணிதப் பட்டதாரியாவாா். பெரு நிறுவன நிகழ்ச்சி ஏற்பாட்டாளராகப் பணியாற்றி வந்துள்ளாா்.
கொல்கத்தாவைச் சோ்ந்த முத்தாலிப் (28) பொறியியல் பட்டதாரியாவாா். இவா், ஆடை உற்பத்தி மற்றும் பால் பொருள்கள் வணிகம் உள்ளிட்ட தொழிகளில் ஈடுபட்டுவந்துள்ளாா்.
ஐந்தாவது நபரான டி.கே. திவாரி (39) இளநிலை பட்டதாரியாவாா். இவா் ஜெய்ஸ்வாலுடன் வணிகத் தொடா்பில் இருந்துள்ளாா்.
ஆறாவது நபரான ஜஸ்வந்த் (29), 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா். லக்னெளவில் மின் பணியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளாா் என்று தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

