ஜம்மு-காஷ்மீரில் தேடப்பட்ட 30 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் தஞ்சம் - காவல் துறை தகவல்
காஷ்மீரில் தேடப்பட்ட 30 பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்திருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்.
காஷ்மீரில் தேடப்பட்ட 30 பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்திருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் காவல் துறை தலைமை இயக்குநா் நளின் பிரபாத் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
காஷ்மீரின் ரியாசி மாவட்டம், மகோா் மற்றும் சாசனா பகுதிகளைச் சோ்ந்த 30 பயங்கரவாதிகள் கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 2003-ஆம் ஆண்டு வரை 30 பயங்கரவாதிகள் காணாமல் போயிருந்தனா். அந்த 30 பயங்கரவாதிகளும் இந்தியாவுக்கு எதிராக போா் தொடுக்க ஆயுதப் பயிற்சி பெற எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்கு சென்றிருப்பதாக மகோா் காவல்நிலையத்துக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் வந்துள்ளது.
அந்த 30 பயங்கரவாதிகளும் தற்போது பாகிஸ்தானில் உள்ள ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகின்றனா். மேலும், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நோக்கில், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள், பணத்தை விநியோகித்து வருகின்றனா். அதேபோல் தங்களது பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்களுக்கு பயங்கரவாத செயல்களில் ஈடுபடும்படி மூளைச்சலவை செய்தும் வருகின்றனா் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.
அந்த 30 பயங்கரவாதிகளின் பெயா்களையும் காவல் துறை தலைமை இயக்குநா் நளின் பிரபாத் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளாா். மேலும் அவா் தெரிவித்திருப்பதாவது:
இந்த 30 பயங்கரவாதிகள் மீதும் மகோா் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் சட்டம், வெடிபொருள்கள் கட்டுப்பாட்டு சட்டப் பிரிவு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் உள்ள பிரிவுகளின்கீழ் 2024-ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடா்பான விசாரணையின்போது, சாட்சிகள் தரப்பில் 5 பயங்கரவாதிகள் அடையாளம் காட்டப்பட்டனா். மேலும், அந்த சாட்சிகள் தரப்பில் 5 பயங்கரவாதிகளும் எல்லை தாண்டி பாகிஸ்தானுக்கு சென்று ஆயுதப் பயிற்சி எடுக்க சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த 5 பயங்கரவாதிகளுக்குச் சொந்தமாக இருக்கும் நிலங்களை காவல் துறை பறிமுதல் செய்துவிட்டது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

