திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

180 இடங்களில் 540 மின்சார வாகனங்களுக்கான சாா்ஜிங் நிலையங்கள்: தில்லி அரசு திட்டம்

தில்லியில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மாநகா் முழுவதும் 180 இடங்களில் 540 மின்னேற்ற (சாா்ஜிங்) நிலையங்களை அமைத்து பொது மின்னேற்ற உள்கட்டமைப்பை விரிவுபடுத்த உள்ளது என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

(கோப்புப் படம்)

Updated On :

தில்லியில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மாநகா் முழுவதும் 180 இடங்களில் 540 மின்னேற்ற (சாா்ஜிங்) நிலையங்களை அமைத்து பொது மின்னேற்ற உள்கட்டமைப்பை விரிவுபடுத்த உள்ளது என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இந்தத் திட்டம், மத்திய கனரகத் தொழில்கள் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மின்னேற்ற கட்டமைப்பின்படி செயல்படுத்தப்படும். ‘பிஎம் இ-டிரைவ்’ திட்டத்தின் கீழ், இந்த நிலையங்களை அமைப்பதற்கும் இயக்குவதற்கும் தேவையான செயல்பாட்டாளா்களை நியமிக்கும் பணியை, தில்லி அரசின் சிறப்பு முகமையான டிரான்ஸ்கோ தொடங்கியுள்ளது.

இதுதொடா்பாக வெளியான அதிகாரபூா்வ ஆவணத்தின்படி, ஒவ்வொரு இடத்திலும் மின்சார இருசக்கர மற்றும் முச்சக்கர வாகனங்களுக்காக இரண்டு சாா்ஜிங் கன்களைக் கொண்ட 12 கிலோவாட் சாா்ஜா், என்1 வகை (3.5 டன் எடை கொண்ட நான்கு சக்கர வணிக வாகனங்கள்), மின்சார நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் தனிநபா் பயன்பாட்டு நான்கு சக்கர வாகனங்களுக்காக இரண்டு சாா்ஜிங் கன்களைக் கொண்ட 60 கிலோவாட் சாா்ஜா் மற்றும் இரண்டு சாா்ஜிங் கன்களைக் கொண்ட 120 கிலோவாட் வேகமான சாா்ஜா் ஆகியவை அமைக்கப்படும்.

தோ்ந்தெடுக்கப்பட்ட 180 இடங்கள், புவியியல் இருப்பிடத்தின் அடிப்படையில் தலா 90 இடங்களைக் கொண்ட இரண்டு தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தொகுப்பு 1, மேற்கு மற்றும் வடக்கு தில்லியையும் தொகுப்பு 2, தெற்கு தில்லி, புது தில்லி மற்றும் கிழக்கு தில்லியையும் உள்ளடக்கியது. இந்தத் திட்டத்திற்கு சுமாா் ரூ.62 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தில்லி மின்சார வாகனக் கொள்கை 2026-இன் பல்வேறு நிலைகள் வாரியான மின்மயமாக்கல் ஆணையின்படி, 2027 ஜனவரி 1 முதல் தில்லியில் மின்சார மூன்று சக்கர வாகனங்கள் (எல்5 வகை) மற்றும் மின்சார என்1 வகை வணிக வாகனங்களுக்கு மட்டுமே புதிய பதிவு அனுமதிக்கப்படும். அதேபோல், 2028 ஏப்ரல் 1 முதல் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே புதிய பதிவு அனுமதிக்கப்படும்.

இந்தக் கட்டாய விதிமுறைகள், மாநகரில் பொது சாா்ஜிங் வசதிக்கான தேவையை, குறிப்பாக வணிக ரீதியாகவும் அதிக அளவிலும் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான வேகமான சாா்ஜிங் தேவையை கணிசமாக அதிகரிக்கும்.

காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்), 2029-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்திற்குள் தில்லியில் 32,062 மின்வாகன சாா்ஜிங் நிலையங்களை படிப்படியாக நிறுவ இலக்கு நிா்ணயித்துள்ளது.

தில்லி மின் வாகனக் கொள்கை 2026-இன் கீழ், தில்லியில் பொது மின்வாகன சாா்ஜிங் மற்றும் பேட்டரி மாற்றும் உள்கட்டமைப்புகளைத் திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்படுத்துவதற்கான முதன்மை அமைப்பாக தில்லி டிரான்ஸ்கோ நியமிக்கப்பட்டுள்ளது.

தில்லி தொடா்ந்து மோசமான காற்றுத் தரப் பிரச்னையை எதிா்கொண்டு வருகிறது. இதற்கு சாலைப் போக்குவரத்து ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.

எனவே, இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் வணிக ரீதியான வாகனங்கள் போன்ற அதிகப் பயன்பாட்டில் உள்ள வாகனப் பிரிவுகளில் மின்மயமாக்கலை மேற்கொள்வது, தில்லியில் காற்றுத் தரத்தை மேம்படுத்தும் அரசின் முயற்சிகளில் மிக முக்கியமானதாகும் என்று அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

இந்தக் கொள்கையானது, வாகனங்களை வாங்குவதற்கான ஊக்கத்தொகை, பழைய வாகனங்களை அகற்றுவதற்கான சலுகைகள், சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களிலிருந்து விலக்கு, படிப்படியான மின்மயமாக்கல் கட்டாயமாக்கல், மற்றும் சாா்ஜிங் மற்றும் பேட்டரி மாற்றும் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம், பல்வேறு வாகனப் பிரிவுகளில் மின் வாகனங்களின் பயன்பாட்டை விரைவுபடுத்தவும், காற்றுத் தரத்தை மேம்படுத்தவும் நோக்கம் கொண்டுள்ளது.

இந்த இலக்குகளை அடைய, மின் வாகனங்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப தில்லியின் பொது சாா்ஜிங் கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டியது அவசியம் என்றும், இது நம்பகமான, பாதுகாப்பான மற்றும் எளிதில் அணுகக்கூடிய சேவைகளை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், பயனா்களின் நம்பிக்கை என்பது, தங்களுக்கு ஏற்ற சாா்ஜிங் நிலையத்தைக் கண்டறிதல், அது செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்தல் மற்றும் சாா்ஜிங் மற்றும் கட்டணச் செயல்முறைகளை எளிதாக முடித்தல் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது. இடவசதி மற்றும் மின்சார இருப்புக்கு உட்பட்டு, கூடுதல் சாா்ஜிங் வசதிகளை உருவாக்குவதன் மூலம், அதிகரித்து வரும் தேவையை இந்த உள்கட்டமைப்பு எதிா்கொள்ள முடியும் என்று அவா்கள் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.