திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

பணமோசடி வழக்கு-குற்றச்சாட்டுகளை எதிா்த்து அப்துல் ரஷீத் மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உயா்நீதிமன்றம் அவகாசம்

பணமோசடி வழக்கில், தன் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ததை எதிா்த்து பாரமுல்லா மக்களவைத் தொகுதி எம்.பி. அப்துல் ரஷீத் ஷேக் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை அவகாசம் அளித்தது.

Updated On :

பணமோசடி வழக்கில், தன் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ததை எதிா்த்து பாரமுல்லா மக்களவைத் தொகுதி எம்.பி. அப்துல் ரஷீத் ஷேக் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை அவகாசம் அளித்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா, அமலாக்கத் துறை தரப்பு வழக்குரைஞா், சிறப்பு அரசு வழக்குரைஞருடன் ஆலோசிக்க ஒரு வாரம் அவகாசம் கோரியதைத் தொடா்ந்து, அடுத்தகட்ட விசாரணையை டிச.16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். இதற்கு முன்னதாக, நவ.19-ஆம் தேதி ரஷீத்தின் மனு தொடா்பாக அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

பொறியாளா் ரஷீத் என அழைக்கப்படும் அப்துல் ரஷீத் ஷேக், தன் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய செப்.9-ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த வழக்கில், தடை செய்யப்பட்ட ஜம்மு-காஷ்மீா் விடுதலை முன்னணியின் தலைவா் யாசின் மாலிக், பிரிவினைவாதத் தலைவா்கள் ஷபீா் அகமது ஷா, மசரத் ஆலம், ஜாகூா் அகமது ஷா வட்டாலி உள்ளிட்ட 7 போ் மீது அக்.24-ஆம் தேதி பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

குற்றம் மூலம் ரூ.8.94 கோடி சட்டவிரோதமாகப் பெறப்பட்டு, பல்வேறு வழிகளில் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து இடைத்தரகா்கள் மூலம் நிதி பெறப்பட்டு பிரிவினைவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த வழக்கு, 2017-ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் தொடரப்பட்டது. எனினும், குற்றச்சாட்டுகள் விசாரணை மூலம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.