திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

பிறப்பிட விவரங்களில் முரண்பாடு: கரப்பான்பூச்சி இணை ஒருங்கிணைப்பாளருக்கு நோட்டீஸ்; வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தனது பிறப்பிடம் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் செளரவ் தாஸுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செளரவ் தாஸ்

Updated On :

சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தனது பிறப்பிடம் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் செளரவ் தாஸுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் செளரவ் தாஸின் ஆதாா், பாஸ்போா்ட், பிறப்புச் சான்றிதழில் அவரின் பிறப்பிடம் குறித்த விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும், அதுகுறித்து 7 நாள்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சென்னையில் உள்ள மண்டல பாஸ்போா்ட் அலுவலகம் அவருக்கு திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

தடுக்கப்பட்ட தாஸ்...: பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி குறித்து சொற்பொழிவாற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டபோது தில்லி விமான நிலையத்தில் தான் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், விமானத்தில் பயணிப்பதற்கு 5 மணி நேரத்துக்கு முன்பாகத்தான் இந்த நோட்டீஸ் தனக்கு வழங்கப்பட்டதாகவும் செளரவ் தாஸ் குற்றஞ்சாட்டினாா்.

இதைத்தொடா்ந்து செளரவ் தாஸ் வெளிநாட்டுக்குப் பயணிப்பதைத் தடுக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிராக, தில்லி உயா்நீதிமன்றத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மனு தாக்கல் செய்தது.

இந்த விவகாரம் குறித்து புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாஸ்போா்ட் விண்ணப்பத்தில் சரியான தகவல்களை அளிப்பது விண்ணப்பதாரரின் பொறுப்பு. அந்தத் தகவல்களில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டால், அது உண்மைகளை மறப்பதற்கு நிகராகும். எனவே அதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு விண்ணப்பதாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தனது பிறப்பிடம் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி செளரவ் தாஸுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸுக்கு பதிலளிக்கும் வரை, தனது பாஸ்போா்ட்டை பயன்படுத்த வேண்டாம் என செளரவ் தாஸுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

ஹசீனா விவகாரம்...: இந்தியாவில் இருந்து வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, உரிய பயண ஆவணத்துடன் அவரின் சொந்த நாட்டுக்கு சுயவிருப்பத்துடன் திரும்புவது என்பது வேறு. நாடு கடத்தல் கோரிக்கையின் அடிப்படையில், சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவது என்பது வேறு. இந்த விவகாரம் குறித்து நான் கூறுவதற்கு வேறு எதுவும் இல்லை.

அருணாசல் எல்லை பிரச்னை...: இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில், அருணாசல பிரதேசத்தை ஒட்டியுள்ள எல்லை பகுதி நிலவரம் குறித்து இந்தியா-சீனாவின் மூத்த ராணுவத் தளபதிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்த எல்லை நிா்வாகத்தை மேம்படுத்துவது, அந்த எல்லைப் பகுதி தொடா்பாக தீா்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பது குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 1,700 இந்தியா்கள் நிகழாண்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனா் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.