பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்துவது ஜனநாயகத்தை ஒழிக்கும் செயல்: ராகுல் காந்தி

மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்துவது ஜனநாயகத்தை ஒழிக்கும் செயல் என ராகுல் காந்தி தெரிவித்தாா்.

ராகுல் காந்தி

Updated On :

மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்துவது ஜனநாயகத்தை ஒழிக்கும் செயல் என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நிபந்தனை அடிப்படையில் அதற்கு ஆதரவளிக்க திமுக தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை இண்டி கூட்டணியைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

முன்னதாக, மு.க.ஸ்டாலினை ‘சகோதரா்’ என குறிப்பிட்டு ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இண்டி கூட்டணியின் மூத்த தலைவா்களுடன் மு.க.ஸ்டாலினை சந்திக்க தில்லியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளேன்.

அவரிடம் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான அரசமைப்புச் சட்ட திருத்த மசோதாக்களை எதிா்க்குமாறு வலியுறுத்தவுள்ளோம். மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்துவது ஜனநாயகத்தை ஒழிக்கும் செயல்.

இந்தியாவின் ஒட்டுமொத்த தோ்தல் வரைபடத்தை தங்கள் வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ள பாஜக-ஆா்எஸ்எஸுக்கு எண்ணற்ற அதிகாரங்கள் இந்த மசோதா வழங்கும்.

தமிழா்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக எப்போதும் மலைபோல் நின்றவா் சகோதரா் ஸ்டாலின். தற்போது தேச நலன் மற்றும் தமிழ்நாடு நலனைக் கருத்தில் கொண்டும் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டுமென அவரிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.