மணிப்பூர்: 19 ஏக்கரில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்ட கசகசா பயிர்கள் அழிப்பு!

மணிப்பூரில் 19 ஏக்கரில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்ட கசகசா பயிர்கள் அழிக்கப்பட்டது குறித்து....

Manipur: Illegal poppy plantations on 19 acres destroyed

மணிப்பூர் - கோப்புப்படம்.

Updated On :

மணிப்பூரில் 19 ஏக்கரில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்ட கசகசா பயிர்களை பாதுகாப்புப் படையினர் அழித்தனர்.

மணிப்பூர் மாநிலம், சேனாபதி மற்றும் தமெங்லாங் மாவட்டங்களில் மொத்தம் 19 ஏக்கர் நிலப்பரப்பில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்டிருந்த கசகசா தோட்டங்களைப் பாதுகாப்புப் படையினர் அழித்துள்ளதாகக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேனாபதி மாவட்டத்தில் உள்ள பைபுங் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நகரி கிராம மலைத்தொடர் பகுதியில், காவல்துறையினர், வனத்துறையினர் உள்ளிட்டோர் அடங்கிய கூட்டுக்குழுவினர் வெள்ளிக்கிழமை கசகசா தோட்டங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நகரி அடிவாரத்தில் அடுத்தடுத்த இரண்டு இடங்களில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்டிருந்த கசகசா பயிர்களை இக்குழுவினர் அழித்தனர். மேலும், சட்டப்பூர்வ பரிசோதனைக்காக 10 கசகசா காய்கள் மற்றும் பூக்களின் மாதிரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக வியாழக்கிழமை, தமெங்லாங் மாவட்டத்தில் உள்ள தமேய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குய்லாங் மற்றும் காடி-4 ஆகிய பகுதிகளில் காவல்துறை, சி.ஆர்.பி.எஃப், அசாம் ரைபிள்ஸ் மற்றும் வனத்துறையினர் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில், சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்டிருந்த கசகசா தோட்டங்கள் அழிக்கப்பட்டன.

Summary

Security forces destroyed illegal poppy plantations on a total of 19 acres of land in Manipur's Senapati and Tamenglong districts, a police statement said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.