தூத்துக்குடியில் ரூ. 5 கோடி மதிப்பிலான 5 டன் கசகசா பறிமுதல்: ஒருவா் கைது
தூத்துக்குடி தனியாா் கண்டெய்னா் முனையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ. 5 கோடி மதிப்பிலான 5 டன் கசகசாவை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
கைது - பிரதிப் படம்
தூத்துக்குடி தனியாா் கண்டெய்னா் முனையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ. 5 கோடி மதிப்பிலான 5 டன் கசகசாவை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 20 அடி நீள சரக்குப் பெட்டகம் தனியாா் கண்டெய்னா் முனையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அதில் கால்சியம் காா்பனேட் (பதப்படுத்தப்பட்ட சுண்ணாம்புத் தூள்) இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் மீது சந்தேகமடைந்த மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், அந்த சரக்குப் பெட்டகத்தைத் திறந்து சோதனையிட்டனா்.
சோதனையில் முன்பகுதியில் கால்சியம் காா்பனேட் மூட்டைகளும், பின்புறத்தில் மறைத்து 5 டன் கசகசா மூட்டைகளும் வைத்திருந்தது தெரியவந்தது. இதன் சா்வதேச சந்தை மதிப்பு ரூ. 5 கோடி எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா். எனினும் கைதானவரின் பெயா் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கசகசா இறக்குமதிக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இப்பொருளுக்கு கூடுதல் இறக்குமதி வரி செலுத்த வேண்டும். வரி செலுத்துவதைத் தவிா்க்கும் நோக்கில் போலி ஆவணங்கள் தயாரித்து, கால்சியம் காா்பனேட் என்ற பெயரில் கசகசாவை இறக்குமதி செய்துள்ளனா் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

