
குஜராத்தில் சிஎன்ஜி நிரப்பும்போது வெடித்துச் சிதறிய கார்! பரபரப்பு விடியோ
குஜராத்தில் சிஎன்ஜி நிரப்பிக்கொண்டிருந்த கார் வெடித்துச் சிதறியது பற்றி....

குஜராத் - photo grab x video.
குஜராத்தில் சிஎன்ஜி நிரப்பிக்கொண்டிருந்த கார் திடீரென வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-48-ல் அமைந்துள்ள சிஎன்ஜி நிரப்பும் நிலையத்தில், எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்த கார் ஒன்று வெடித்துச் சிதறியதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
வாகனத்திற்குள் யாரும் இல்லாததால், இந்த வெடிவிபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று அவர்கள் கூறினர்.
கர்ஜன் காவல் நிலைய அதிகாரி கூறுகையில், வியாழக்கிழமை மதியம் 2 மணியளவில் கர்ஜன் அருகே உள்ள இந்தியன் ஆயில் எரிபொருள் நிலையத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், வாகனத்தில் சிஎன்ஜி எரிபொருள் நிரப்பப்பட்ட உடனேயே அதிலிருந்த சிலிண்டர் வெடித்ததாகவும் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இச்சம்பவம் தொடர்பான காட்சிகளில், வெடிவிபத்தினால் வாகனத்தின் பின்பகுதி சிதைந்து போனதும், கண்ணாடித்துண்டுகள் எல்லா திசைகளிலும் சிதறி விழுந்ததும் பதிவாகியுள்ளன.
இச்சம்பவத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன.
மேலும் கார் வெடித்துச்சிதறிய போது அருகிலிருந்தவர்கள் அச்சத்தில் ஓடும் காட்சியும் பதிவாகியுள்ளது.
Summary
A car exploded while being refuelled at a CNG filling station on National Highway-48 in Gujarat's Vadodara district, police said on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






