
கார் வாங்குவோரின் சாய்ஸ் மாறுகிறது! சிஎன்ஜி விற்பனையில் புதிய சாதனை!
இந்தியாவில் அதிகரிக்கும் சிஎன்ஜி கார்கள் பற்றி..

இந்தியாவில் சிஎன்ஜி கார்களின் விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 2026 ஆகஸ்டு மாதத்தில் விற்பனையான பயணிகள் வாகனங்களில் 25 சதவீதம் சிஎன்ஜி கார்கள். அதாவது, புதிதாகப் பதிவு செய்யப்பட்ட நான்கு கார்களின் ஒன்று சிஎன்ஜி மாடலாக இருக்கும்.
இதற்கிடையில், பெட்ரோல் வாகனங்களின் பங்கு முந்தைய ஆண்டின் 46 சதவீதத்திலிருந்து சரிந்து, 41 சதவீதமாகக் குறைந்தது. 2025 ஆகஸ்டில் சிஎன்ஜியின் பங்கு 21 சதவீதமாக இருந்தது.
ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் சுமார் 4.01 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ள நிலையில், சிஎன்ஜி கார்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாகும்.
இதில் மாருதி சுஸுகி மட்டும் 71 சதவிகிதத்துடன் முதலிடத்திலும், டாடா மோட்டார்ஸ் 17 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. 9 சதவிகிதத்துடன் ஹூண்டாய் மூன்றாம் இடத்தில் உள்ளது.
பெட்ரோலைவிட குறைந்த எரிபொருள் செலவு. அதிகரித்துள்ள சிஎன்ஜி நிலையங்கள் மற்றும் பல்வேறு மாடல்களில் கிடைக்கும் வசதி ஆகியவை சிஎன்ஜி வாகனங்கள் அதிகம் விற்பனையாகக் காரணமாக அமைந்துள்ளது.
அதேசமயம் பெட்ரோல் கார்களின் சந்தைப்பங்கு கடந்த ஆண்டில் 46 சதவிகிதத்திலிருந்து 41 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






