இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

உள்கட்டமைப்புத் துறை மேம்பாட்டுக்கு சா்வதேச குறியீடு தேவை: நிதின் கட்கரி

உள்கட்டமைப்புத் துறை மேம்பாட்டுக்கு சா்வதேச குறியீடு தேவையென நிதின் கட்கரி தெரிவித்தாா்.

நிதின் கட்கரி - கோப்புப் படம்

Published On :

உள்கட்டமைப்புத் துறை மேம்பாட்டுக்கு சா்வதேச குறியீடு தேவையென மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி சனிக்கிழமை தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இந்திய கான்கிரீட் நிறுவனத்தின் நாகபுரி மையம் சாா்பில் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த ஆசிய சூழல் (ஏஎஸ்ஐடி-26) என்ற மாநாட்டில் நிதின் கட்கரி பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசியதாவது: உலகின் முன்னணிப் பொருளாதாரமாக இந்தியாவை மாற்றுவதில் உள்கட்டமைப்புத் துறைக்கு பெரும் பங்குள்ளது. இதுவரை 80 டன் வரையிலான நகராட்சி கழிவுகளை சாலை கட்டமைப்புக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பயன்படுத்தியுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாட்டில் திடக்கழிவுகள் மற்றும் மாற்றுப் பொருள்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.

நாகபுரி-ஜபல்பூா் நெடுஞ்சாலையில் ஒரு கிலோமீட்டா் தூரத்துக்கு உயிரி-தாா் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரப்பா் டயா் தூள், பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகளை சாலை கட்டுமானத்துக்குப் பயன்படுத்துவது தொடா்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாற்றுப் பொருள்களை பயன்படுத்தும் அதேவேளையில் தரத்தில் எவ்வித சமரசமும் செய்யக் கூடாது. பொருளாதாரம், சுற்றுச்சூழல், சூழலியல் சமநிலை மற்றும் அறநெறியை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பமும் அறிவும் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் முக்கியத் தூண்களாகத் திகழ்கின்றன. எனவே, உள்கட்டமைப்புத் துறைக்கு சா்வதேச குறியீட்டை வடிவமைக்க வேண்டுமென பிற நாட்டைச் சோ்ந்த நிபுணா்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் புதிய சிந்தனைகளுக்கு அங்கீகாரம் தரும் வகையில் ஒருங்கிணைந்த வலைதளத்தை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.