
இனி செல்போனே உங்கள் ஆடைகளின் அலமாரியாக மாறும்! கூகுள் போட்டோஸின் புதிய வசதி!
உங்கள் செல்போனில் இருக்கும் புகைப்படங்களைக் கொண்டு டிஜிட்டல் அலமாரி உருவாக்குவது குறித்து...

கூகுள் - கோப்புப் படம்
கூகுள் போட்டோஸ் செயலியில் புதியதாக “ஏஐ வாட்ரோப்” எனும் செய்யறிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உங்கள் செல்போனில் நீங்கள் வைத்திருக்கும் புகைப்படங்களை ஆராய்ந்து அதிலிருந்து ஆடைகளை செய்யறிவு மூலம் கண்டுபிடித்து உங்கள் திட்டங்களுக்கு ஏற்ப புதிய ஆடை காம்பினேஷன்களை கொடுக்க முடியும்.
உதாரணமாக, உங்களிடம் உள்ள ஒவ்வொரு சட்டைக்கும் உங்களிடம் இருக்கும் எந்தெந்த பேண்ட் பொருத்தமாக இருக்கும் என இந்தச் செய்யறிவு கணக்கிடுகிறது.
இந்தச் செய்யறிவு பரிந்துரைக்கும் ஆடை காம்பினேஷன்கள் எப்படி இருக்கும் என்பதை விர்ச்சுவல் முறையிலும் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அலுவலகம், சுற்றுலா என உங்களின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏற்றவாறு இந்தச் செய்யறிவு காம்பினேஷன்களை உருவாக்கிக் கொடுக்கும்.
இந்தப் புதிய வசதி, இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். (ஆப்பிள்) பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இதற்கான சில நிபந்தனைகள் நிறைவாகமல் இந்த வசதி கிடைக்காது எனக் கூறப்படுகிறது.
தேவையான எண்ணிக்கையில் புகைப்படங்களைச் சேகரித்து இந்த வசதியை கூகுள் போட்டோஸ் வழங்கும் எனத் தெரியவருகிறது. வெறும், புகைப்படங்களைச் சேகரித்து வந்த கூகுள் போட்டோஸ் தற்போது உங்களுக்கான தனித்துவமிக்க வாட்ரோபை உருவாக்குவதிலும் களமிறங்கிவிட்டது.
Summary
A new AI-powered feature called "AI Wardrobe" has been introduced in Google's Google Photos app.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





