
பல்லாட்டுக்குட்டி யானைக்கு கேரள மக்கள் கண்ணீர் அஞ்சலி!
மின்னல் தாக்கி பலியான பல்லாட்டுக்குட்டி யானைக்கு கேரள மக்கள் கண்ணீர் அஞ்சலி

பல்லாட்டு பிரம்மதத்தன் - eps
கேரள மாநிலத்தில் கோயில் திருவிழாக்களின்போது அதன் பிரமாண்ட தோற்றத்தால் அதிகம் கவனம் பெறும் பல்லாட்டு பிரம்மதத்தன் என்ற யானைக்கு கேரள மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அண்மையில், மேலம்பாரா பகுதியில் அமைந்துள்ள பல்லாட்டு இல்லம், தற்போது மௌனமாக மாறியிருக்கிறது. ஒரு சில நாள்களுக்கு முன்பு, இங்கு மின்னல் தாக்கியதில் 54 வயது பள்ளத்து பிரம்மதத்தன் யானை பலியானது.
யானைப் பிரியர்களால் பல்லாட்டுக்குட்டி என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த யானை பார்க்க பிரமாண்டமாக இருந்தாலும், அதன் குழந்தைத்தனம் மாறாத செயல்களால் மக்களை மிகவும் கவர்ந்து வந்தது.
பல்லாட்டு குடும்பத்தினருக்கு இந்த இறுதி அஞ்சலி நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியானதாக அமைந்தது. பல ஆண்டுகளாகத் தங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாகத் திகழ்ந்த அந்த யானையின் உயிரற்ற உடலுக்கு அருகே நின்றிருந்த அதன் உரிமையாளரும் 'கேரளம் திருவிழா ஒருங்கிணைப்புக் குழு'வின் மாநிலத் தலைவருமான ராஜேஷ் பல்லாட்டு, அவரது சகோதரர் சதீஷ் மற்றும் அவர்களது தாயார் கமலம்மா ஆகியோர் தங்கள் கண்ணீரை அடக்க முடியாமல் தவித்தனர்.
மிகவும் அன்போடு பழகும், இது ஒரு சாதாரண யானையைப் போல அல்ல, கடவுள் எங்களுக்குக் கொடுத்த பரிசு. எப்போதுமே அமைதியாக யாருக்கும் தொல்லை கொடுக்காமல் இருக்கும். ஒருமுறை, கோயில் திருவிழாவின்போது எட்டு யானைகள் மதம்கொண்டு ஓடின. அப்போது இந்த யானை மட்டும் அமைதியாக நின்றுகொண்டிருந்தது. எங்களில் ஒருவர் மரணித்திருந்தால்கூட இந்த அளவுக்கு துக்கம் அடைந்திருக்க மாட்டோம், இந்த துயரத்தை தேற்றவே முடியவில்லை என்கிறார் சதீஷ்.
கேரளக் கோயில் திருவிழாக்களில் வெறும் பங்கேற்பாளராக மட்டுமின்றி, அதற்கும் மேலான ஒரு முக்கிய இடத்தைப் பெற்று பிரம்மதத்தன் திகழ்ந்தது.
2015-ஆம் ஆண்டு நடைபெற்ற திருச்சூர் பூரம் விழாவில் பரமேக்காவு தேவியின் திருவுருவச் சிலையான 'திடம்பை' சுமந்து சென்ற பல்லாட்டுக்குட்டி, வைக்கம் அஷ்டமி உள்ளிட்ட முக்கியத் திருவிழாக்களிலும் சிறப்பானதொரு அங்கமாகத் திகழ்ந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
People of Kerala pay tearful tribute to Pallattukutti the elephant!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





