
பருவமழையை விழுங்கிய எல்நினோ! குளிர்காலத்தையாவது விட்டு வைக்குமா?
பருவமழையை விழுங்கிய எல்நினோ குளிர்காலத்தையாவது விட்டு வைக்குமா? என்பது பற்றி...

குளிர் காலம் - ANI
இந்தியாவின் பருவமழைக் காலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வரவிருக்கிறது, ஆனால், எல்நினோ முடிவுக்கு வரவில்லை. ஏற்கனவே இயல்பான அளவை விட குறைவான பருவமழையைக் கொடுத்துவிட்டு அடுத்து எல்நினோ எதற்காகக் காத்திருக்கிறது என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.
2026ம் ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை 13 சதவித மழைப் பாற்றாக்குறையுடன் நிறைவடையப் போகிறது. நாட்டின் பெரும்பாலான நீர்நிலைகள் எலும்பும் தோலுமாக வறண்டுபோயிருக்கின்றன.
மழை நீரில் நின்றுகொண்டிருக்க வேண்டிய மக்கள் குடிநீருக்கே அல்லாடும் அவலம் நிலவுகிறது.
இந்த நிலையில்தான், இந்த ஆண்டின் இறுதியில் எல்நினோ வலுவாக செயல்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
பருவ மழை போல குளிர்காலம் வறண்டுபோய்விடுமா என்றால் அதற்கும் இல்லை என்ற பதில் வருகிறது. காரணம், எல்நினோ தாக்கத்தால் இந்தியாவின் குளிர்காலம் மிகவும் சிக்கலாக இருக்கலாம் என்பதே.
இந்தியாவிலிருந்து பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் ஒரு இயற்கை அமைப்பு இந்தியாவின் குளிர்காலத்தை எவ்வாறு நிலைகுலையச் செய்யப் போகிறது என்று கணிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக 2015 - 16ஆம் ஆண்டு குளிர்காலம் சற்று வெப்பமாகவே இருந்துள்ளது. இயல்பு அளவை விட குளிர் நிலை சற்று குறைவாகவே இருந்தது. குளிர்காலத்தில் மழைப்பொழிவும் குறைவு.
குளிர்காலம் என்பது இந்தியாவில் கோதுமை மற்றும் ராபி கால பயிர்களுக்கு மிகவும் முக்கியம் என்பதால், அந்த உற்பத்தியும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Summary
El Niño swallowed the monsoon! Will it spare the winter, at least?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






