ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

பஞ்சாபில் போதைப்பொருளுக்கு எதிராகப் போராடிய தன்னார்வலர் சுட்டுக் கொலை!

பஞ்சாபில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக போராடியவர் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி..

Shot dead

தன்னார்வலர் சுட்டுக் கொலை - கோப்புப்படம்.

Published On :

பஞ்சாபில் போதைப்பொருளுக்கு எதிராகப் போராடிய தன்னார்வலர் பட்டப்பகலில் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் மருந்துக் கடைகளில் சட்டவிரோத வகையில் போதைப்பொருள்கள் விற்பனைக்கு எதிராக கடுமையாகப் போராடி வந்தவர் தன்னார்வலர் பர்வீந்தர் சிங் ஜோட்டா.

இந்த நிலையில், மருந்து கடை ஒன்றில் சட்டவிரோத போதைப்பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து, ஜோடா அந்த கடைக்குச் சென்று இதுதொடர்பாக விசாரித்துள்ளார்.

அப்போது, கடை உரிமையாளர் திடீரென மறைத்துவைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து, ஜோடாவை நோக்கிச் சுட்டுள்ளார். இந்த நிலையில், பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஜோடா உயிரிழந்தார்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மான்சாவில் பர்வீந்தர் சிங் ஜோட்டா மறைவுக்கு, நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER