பள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்புசி.வி. சண்முகம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!6 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவர் நடவடிக்கை செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்!உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைவுஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபினர் கைது!

உச்ச நீதிமன்ற பேரணி! எதிர்க்கட்சிகள் மீது இரு வழக்குகள் பதிவு!

உச்ச நீதிமன்றம் நோக்கி அனுமதியின்றி பேரணி சென்ற எதிர்க்கட்சிகள் மீது இரு வழக்குகள் பதிவு...

INDIA Alliance

உச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேரணி - PTI

Published On :

உச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணிக் கட்சிகள் பேரணி நடத்தியது தொடர்பாக தில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் கோடிக்கணக்கில் வாக்காளா் பெயா்கள் நீக்கம் மற்றும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை நீக்கம் செய்யக் கோரி இந்தியா கூட்டணிக் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தில்லியில் உள்ள ரஃபி மாா்க் பகுதியில் உள்ள இந்திய அரசமைப்பு மன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்தை நோக்கி இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் திங்கள்கிழமை பேரணி நடத்தினர்.

தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ஞானேஷ் குமாருக்கு எதிராக மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த பேரணியில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த பேரணிக்கு தில்லி காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில், சாலைகளில் காவல்துறை அமைந்திருந்த தடுப்புகளை தகர்த்து இந்தியா கூட்டணிக் கட்சியின் பேரணி நடத்தப்பட்டது.

இந்த நிலையில், அனுமதியின்றி பேரணி நடத்தியதாக தில்லியின் பாரகம்பா சாலை மற்றும் திலக் மார்க் காவல் நிலையங்களில் இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Summary

Supreme Court Rally! Two Cases Registered Against Opposition Parties!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.