மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!தவெக ஆட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!காஞ்சிபுரத்தில் இந்தியாவிலேயே சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம்! ஜனவரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்!ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

தெலங்கானா: 3 ஆண்டுகளாகச் சேமித்த 10 ரூபாய் நாணயங்களைக் கொடுத்து இருசக்கர வாகனம் வாங்கிய நபர்!

தெலங்கானாவில் 3 ஆண்டுகளாகச் சேமித்த 10 ரூபாய் நாணயங்களைக் கொடுத்து இருசக்கர வாகனம் வாங்கிய நபர் பற்றி...

Telangana man buys Rs 1.23 lakh scooter with Rs 10 coins saved over three years

இருசக்கர வாகனம் - Photo grab X video

Published On :

தெலங்கானாவில் 3 ஆண்டுகளாகச் சேமித்த 10 ரூபாய் நாணயங்களைக்கொண்டு நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார்.

தெலங்கானா மாநிலம், லக்ஸெட்டிபேட்டைச் சேர்ந்தவர் பி. ரவி ஜோசப். இவர், தனது குடும்பத்திற்குப் பயனுள்ள ஒன்றை வாங்க வேண்டும் என்ற நோக்கில், மளிகைப் பொருட்கள் வாங்குவது போன்ற அன்றாடப் பரிவர்த்தனைகளின்போது கிடைத்த 10 ரூபாய் நாணயங்களைச் சேமித்து வந்திருக்கிறார்.

ஆரம்பத்தில் இவரது இந்த யோசனையின் மீது குடும்பத்தினருக்கு நம்பிக்கை வரவில்லை என்றாலும், நாளடைவில் அவர்கள் ஆதரவு அளிக்கத் தொடங்கினர். இதையடுத்து, மூன்றாண்டுகளாகத் தான் சேமித்த 10 ரூபாய் நாணயங்களைக் கொடுத்து, ரூ. 1.23 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை ரவி ஜோசப் வாங்கியுள்ளார்.

"எனது பழைய வாகனத்தில் அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்டதாலேயே புதிய இருசக்கர வாகனத்தை வாங்க முடிவு செய்தேன்" என்று ரவி ஜோசப் கூறினார்.

இருசக்கர வாகனத்திற்கான தொகையை நாணயங்களாக ஏற்றுக்கொள்வார்களா என்று அறிந்துகொள்ள ரவி ஜோசப் சுமார் 15 நாட்களுக்கு முன்பே தங்களை அணுகியதாகச் ஷோரூம் மேலாளர் தெரிவித்தார். அதற்குத் தாங்கள் சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

பின்னர், ரவி ஜோசப் ரூ. 1.23 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் நாணயங்களைச் ஷோரூமுக்குக் கொண்டுவந்து கொடுத்துத் தனக்கான இருசக்கர வாகனத்தைப் பெற்றுக்கொண்டதாக மேலாளர் மேலும் தெரிவித்தார்.

Summary

A man in Telangana's Mancherial district bought a Honda Activa scooter worth Rs 1.23 lakh with Rs 10 coins he had saved over three years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.