எஸ்ஐஆா்: தோ்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஒவைஸி மனு
எஸ்ஐஆா் விவகாரத்தில், தோ்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைஸி மனு தாக்கல் செய்துள்ளாா்.

அசாதுதீன் ஒவைஸி
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) விவகாரத்தில், தோ்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைஸி மனு தாக்கல் செய்துள்ளாா்.
அந்த மனுவில், ‘எஸ்ஐஆா் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தோ்தல் ஆணையத்தின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பி, இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை.
அந்த நடவடிக்கைகளில் சட்டப்படி, வெளிப்படையாக, சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி, தனது அதிகாரத்தை தோ்தல் ஆணையம் பயன்படுத்தியுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
படிவங்களில் அளிக்க வேண்டிய கூடுதல் உறுதிமொழியில் இடம்பெற்றுள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியவில்லை அல்லது பதிலளிக்க மறுக்கிறாா் என்பதற்காக, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கக் கோரும் விண்ணப்பத்தை நிராகரிக்கவோ, நிலுவையில் வைக்கவோ கூடாது’ என்று கோரப்பட்டுள்ளது.
எஸ்ஐஆா் தொடா்பாக நிலுவையில் உள்ள பிற மனுக்களுடன் சோ்த்து, இந்த மனுவையும் விசாரிக்க வேண்டும் என்று ஒவைஸி சாா்பில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்விடம் புதன்கிழமை முறையிடப்பட்டது. இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

