FOLLOW US

ON GOOGLE DISCOVER

உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

200 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பெண் குழந்தை! தேரில் ஊர்வலம் நடத்திய குடும்பத்தினர்!

மகாராஷ்டிர குடும்பத்தில் 200 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை பெண் குழந்தை பிறந்துள்ளதை அக்குடும்பத்தினர் கொண்டாடியது குறித்து...

First baby girl in 200 years! Family organizes chariot procession

ரதத்தில் அழைத்துவரப்படும் பெண் குழந்தை - எக்ஸ்

Published On :2 செப்டம்பர் 2026, 9:55 pm IST

மகாராஷ்டிரத்தில் ஒரு குடும்பத்தில் 200 ஆண்டுகளாக ஆண் குழந்தைகள் மட்டுமே பிறந்து வளர்ந்த நிலையில், தற்போது முதல்முறையாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனைக் கொண்டாடும் வகையில் அக்குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்து தேரில் ஊர்வலம் நடத்தி வீட்டிற்கு அப்பெண் குழந்தையை அழைத்து வந்தனர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் பீட் நகரைச் சேர்ந்த தஹிபாலே குடும்பத்தில் கடந்த 4 தலைமுறைகளாக பெண் குழந்தைகளே பிறக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அனைத்து தம்பதிக்கும் ஆண் குழந்தை மட்டுமே பிறந்து வளர்ந்த நிலையில், தற்போது 200 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக அக்குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனால் குடும்ப உறுப்பினர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியில் செய்த செயல் இணையத்தில் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பீட் நகரில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்த நிலையில், தாயும் சேயும் நலமாக உள்ளனர். அவர்களை வீட்டிற்கு அழைத்துவர மருத்துவமனை வாயிலில் இருந்து குதிரைகள் அடங்கிய தேரை ஏற்பாடு செய்து அதில் பெண் குழந்தையை அழைத்துவந்துள்ளனர்.

வழிநெடுகிலும் மலர்களைத் தூவி அப்பெண் குழந்தையை விமர்சையாக அக்குடும்பத்தினர் தங்கள் வீட்டிற்கு வரவேற்றுள்ளனர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

சமூகத்தில் பெண் குழந்தை பிறப்புக்கு எதிராக பல்வேறு செயல்கள் அரங்கேறிவரும் நிலையில், பெண் குழந்தையை கொண்டாடும் இக்குடும்பத்தின் செயல் நல்லதொரு விழிப்புணர்வாக அமைந்துள்ளது என பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Summary

First baby girl in 200 years! Family organizes chariot procession

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.