இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

ஹிமாசலில் தொடர் மழை: 87 சாலைகள் மூடல்

ஹிமாசலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 87 சாலைகள் மூடப்பட்டிருப்பது பற்றி...

87 roads shut; MeT says wet spell in Himachal to continue till Sep 10

ஹிமாசல்.

Published On :4 செப்டம்பர் 2026, 7:42 pm IST

ஹிமாசலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மொத்தம் 87 சாலைகள் மூடப்பட்டுள்ளன.

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் தகவல்படி, மூடப்பட்டுள்ள 87 சாலைகளில் அதிகபட்சமாக மண்டி மாவட்டத்தில் 37, அதைத் தொடர்ந்து குலுவில் 22, காங்ராவில் 8, சம்பாவில் 5, சிர்மார் மற்றும் உனாவில் தலா 4, சிம்லாவில் 3, சோலனில் 2 மற்றும் லாஹூல்-ஸ்பிதி மற்றும் பிலாஸ்பூரில் தலா 1 சாலையும் முடங்கியுள்ளன.

இதுதவிர, 27 மின் மாற்றிகள் மற்றும் 19 குடிநீர் விநியோகத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே மாநிலத்தின் சில பகுதிகளில் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை மாலை முதல் சிர்மார் மாவட்டத்தில் உள்ள நஹான் பகுதியில் 67.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இதேபோல், ஜோகிந்தர்நகர் 57 மி.மீ, நடான் 52.6 மி.மீ, ஜட்டன் பாரேஜ் மற்றும் பர்வாய்ன் தலா 40 மி.மீ, தர்மசாலா 34.4 மி.மீ, நைனா தேவி 34.2 மி.மீ, கடௌலா 26.1 மி.மீ மற்றும் நேரி 20 மி.மீ ஆகிய இடங்களில் மழை பதிவாகியுள்ளது. காங்ரா மற்றும் சுந்தர்நகர் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், காங்ரா மற்றும் சிர்மார் மாவட்டங்களின் சில பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்யக்கூடும் என சிம்லா வானிலை மையம் எச்சரித்து மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் கணித்துள்ளது.

ஜூன் 30-ஆம் தேதி பருவமழை தொடங்கியது முதல் இதுவரை மழை தொடர்பான விபத்துகளில் மாநிலம் முழுவதும் 108 பேர் பலியாகியுள்ளனர் என்றும் மாநிலத்திற்கு ரூ. 1,237 கோடி மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Summary

A total of 87 roads were closed in Himachal Pradesh following rainfall, even as the Shimla MeT Office on Friday issued a yellow alert, warning of further heavy rains in isolated areas of Kangra and Sirmaur districts on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.