FOLLOW US

ON GOOGLE DISCOVER

உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

சென்னை, புறநகரில் பரவலாக மழை! இரவில் தொடருமா?

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து வருவது குறித்து...

கோப்புப் படம்

Published On :3 செப்டம்பர் 2026, 6:43 pm IST

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. காலை முதலே வெய்யில் வாட்டி வதைத்துவந்த நிலையில், மாலை முதலே மழை பெய்து வருகிறது.

சென்னை எழும்பூர், சென்ட்ரல், சேத்பட், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கும், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, அண்ணாநகர், வடபழனி, வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதேபோன்று புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், மதுரவாயல், பூவிருந்தவல்லி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் புறநகரில் திடீர் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Weather update Widespread rain in Chennai and its suburbs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.