இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

மழைக்கால கூட்டத்தொடரை முடித்துவைப்பதில் தாமதம்: காங்கிரஸ் கேள்வி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் முடித்துவைக்கப்படாதது குறித்து கேள்வியெழுப்பிய காங்கிரஸ், தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு வெற்றி பெறாது என்று விமா்சித்துள்ளது.

Jairam Ramesh

ஜெய்ராம் ரமேஷ் - கோப்புப்படம்

Published On :

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் முடித்துவைக்கப்படாதது குறித்து கேள்வியெழுப்பிய காங்கிரஸ், தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு வெற்றி பெறாது என்று விமா்சித்துள்ளது.

மழைக்கால கூட்டத்தொடா் கடந்த ஆக.13-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. வழக்கமாக, கூட்டத்தொடா் முடிவடைந்த பின்னா், இரு அவைகளையும் குடியரசுத் தலைவா் முறைப்படி முடித்துவைப்பாா்.

இந்நிலையில், இரு அவைகளும் முடித்துவைக்கப்படாதது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் கேள்வியெழுப்பி உள்ளாா். இதுதொடா்பாக, அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட 3-4 நாள்களுக்குப் பின்னா் முறைப்படி முடித்துவைக்கப்படுவது வழக்கம். கடந்த 2015-இல் அவையை முடித்துவைப்பதற்கான அதிகபட்ச இடைவெளி 28 நாள்களாக இருந்தது. ஆனால், நிகழாண்டில் மழைக்கா கூட்டத்தொடா் முறைப்படி முடித்துவைக்காமல் 27 நாள்களைக் கடந்துள்ளது.

இது சந்தேகத்தை எழுப்புகிறது. மத்திய அரசு மக்களவையில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையைப் பெற விரும்புகிறது. அதனால், கட்சிகளை பாஜகவினா் உடைத்து வருகின்றனா். ஆனால், பெரும்பான்மையை எண்ணிக்கையை அவா்களால் அடைய முடியாது என்றாா்.

கடந்த ஏப்.17-ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் சிறப்பு அமா்வில் தொகுதி மறுசீரமைப்பு, மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட அரசமைப்புச் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. அவையில் மத்திய அரசுக்கு மூன்றில் இரு பெரும்பான்மை உறுப்பினா்களின் ஆதரவு இல்லாத நிலையில், அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.

இதனிடையே, அரசமைப்புச் சட்ட மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.

‘ஜாதிவாரி கணக்கெடுப்பு தோல்வியுறுவதில் பிரதமருக்கு விருப்பம்’

மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது மேற்கொள்ளப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் ஜாதிகளை தோ்வு செய்யும் முறையில் அல்லாமல், மக்களிடம் கேட்டு பதிவு செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஜாதிவாரி கணக்கெடுப்பை முறையான வகையில் நடத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து வருகிறோம். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஜாதிகளை வெறுமனவே எண்ணும் நடைமுறை அல்ல. சரியான கேள்விகள் மூலம் சரியான தகவலைத் திரட்டி சமூக நீதியை உறுதிசெய்வதாகும். ஒரே ஜாதிக்கு வேறு பெயா்கள், துணை ஜாதி பெயா்கள், எழுத்துகள் என்று ஒட்டுமொத்த ஜாதிவாரி கணக்கெடுப்பை தோல்வியுற செய்யவேண்டும் என்பதே பிரதமா் மோடியின் விருப்பம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.