புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரிக்ஸ் அமைப்பு கண்டனம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை பிரிக்ஸ் அமைப்பு கண்டித்தது குறித்து...

Leaders of BRICS member countries.

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள். - படம் - எக்ஸ்

Published On :

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரிக்ஸ் அமைப்பு சனிக்கிழமை (செப். 12) கண்டனம் தெரிவித்தது.

உலகின் முக்கிய 11 பெரிய பொருளாதார சக்திமிக்க நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 18 ஆவது உச்சி மாநாடு தலைநகர் தில்லியில் இன்று முதல் இரு நாள்கள் நடைபெறுகிறது.

இந்த அமைப்புக்கு தற்போது இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாடு தில்லியில் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது.

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் மோடி முன்மொழிந்த பிரிக்ஸ் தில்லி பிரகடனம் உலகத் தலைவர்களால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதன்மூலம், கடந்தாண்டு ஏப்ரல் மாதம், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் கண்டித்துள்ளன.

மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை இருக்க வேண்டும் என்றும் பயங்கரவாதத்தை முழுவதுமாக தகர்த்தெறிய வேண்டும் என்றும் பிரிக்ஸ் நாடுகள் வலியுறுத்தியது.

அந்தப் பிரகடனமானது, உலகளாவிய பயங்கரவாதம், சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள், இணையவழி மோசடி மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

Summary

BRICS condemned the Pahalgam terror attack on Saturday (Sept. 12).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.