
மணிப்பூரில் ஆயுதம் ஏந்திய மூவர் கைது! நவீன ரக துப்பாக்கிகள் பறிமுதல்!
சுராசந்த்பூர் மாவட்டத்தில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக..

மணிப்பூர் - கோப்புப்படம்.
மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய மூவர் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களிடமிருந்து ஐந்து நவீன ரகத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர்.
ஹெங்லெப் துணைப் பிரிவில் உள்ள முன்பி கிராமத்தில், மாநிலக் காவல்துறை மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் ஆகியவற்றின் கூட்டுப் படையினரால் இவர்கள் வெள்ளிக்கிழமை பிடிபட்டனர்.
ஆயுதம் வைத்திருந்த நபர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற விவரத்தை காவல்துறை வெளியிடவில்லை. அவர்களிடமிருந்து ஒரு ஹெச்கேஜி, 3 தாக்குதல் துப்பாக்கி, ஒரு ஏ1 துப்பாக்கி, இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள், ஒரு எம்22 தாக்குதல் துப்பாக்கி, பல்வேறு ஆயுதங்களுக்கான ஏழு மேகசின்கள் (தோட்டாக்கள் நிரப்பும் பெட்டிகள்) மற்றும் 298 தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவித்தது.
மணிப்பூரில் இன மோதல்கள் வெடித்ததிலிருந்து பாதுகாப்புப் படையினர் அங்குத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மே 2023-ல் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த மைதேயி சமூகத்தினருக்கும் மலைப்பகுதியைச் சேர்ந்த குகி சமூகத்தினருக்கும் இடையே வெடித்த இன மோதலில் சுமார் 306 பேர் பலியாகினர். மேலும், 49 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





