பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

நகர்ப்புற ஏழைகளுக்கு 18.77 லட்சம் வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்

நகர்ப்புற ஏழை மக்களுக்கு 18.77 லட்சம் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் குறித்து...

PMAY-U 2.0 Government approves 18.77 lakh houses

நகர்ப்புற ஏழைகளுக்கு 18.77 லட்சம் வீடுகள் - படம்: எஐ

Published On :

புது தில்லி: நகர்ப்புற ஏழை மக்களுக்கு 18.77 லட்சம் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

புது தில்லியில் மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக் குழுவின் ஒன்பதாவது கூட்டம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலாளர் சதேந்திர சிங் தலைமையில் வியாழக்கிழமை(செப்.10) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 'அனைவருக்கும் வீடு' திட்டத்தின் இணைச் செயலாளரும் பணித்திட்ட இயக்குநருமான குமார் ரவிகாந்த் சிங், இணைச் செயலாளரும் நிதி ஆலோசகருமான சஞ்சீத், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பங்கேற்கும் மாநிலங்களின் பணித்திட்ட இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநிலப் பிரதிநிதிகளிடம் பேசிய சிங், பிரதமர் நகர்ப்புறம் வீட்டு வசதித் திட்டம் 2.0 திட்டத்தின் பலன்கள் தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளையும் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், திட்டத்தை உரிய நேரத்தில் மற்றும் திறம்படச் செயல்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஏதேனும் தடைகள் இருந்தால், அவற்றை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் கலந்தாலோசித்து உடனடியாக தீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கூட்டத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், நகர்ப்புறங்களில் 'அனைவருக்கும் வீடு' என்ற இலக்கை நோக்கிய முன்னேற்றத்தையும், பிரதமர் நகர்ப்புறம் வீட்டு வசதித் திட்டம் 2.0-ஐ செயல்பாடுகளை மேலும் துரிதப்படுத்தும் வகையில் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 18 லட்சத்து 77 ஆயிரம் வீடுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள 18.77 லட்சம் வீடுகளில், 17.19 லட்சம் வீடுகள் (92%) பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் அஸ்ஸாம், பிகார், குஜராத், தெலங்கானா, திரிபுரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்த 'பயனாளிகள் தலைமையிலான கட்டுமானம் மற்றும் கூட்டு முயற்சியில் மலிவு விலை வீட்டுவசதி ஆகிய பிரிவுகளின் கீழ் கூடுதலாக சுமார் 29 ஆயிரம் வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்யவும், சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கும் இத்திட்டத்தின் பலன்களை விரிவுபடுத்தவும், 1.80 லட்சம் வீடுகள் முதியவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி) பயனாளிகளுக்கு 3.25 லட்சம் வீடுகளும், பழங்குடியின (எஸ்டி) பயனாளிகளுக்கு 1.02 லட்சம் வீடுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஒபிசி) 8.22 லட்சம் வீடுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக, பிரதமர் வீட்டு வசதித் திட்டம் மற்றும் பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் 2.0 ஆகிய திட்டங்களின் கீழ், 1.25 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதுடன், 1 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வீட்டு உரிமையில் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் இந்த திட்டம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட வீடுகள், வீட்டின் பெண் உறுப்பினர் பெயரிலோ அல்லது கூட்டு உரிமையிலோ அமைகின்றன; இது குடும்பத்திற்குள் பெண்களின் பொருளாதார மற்றும் சமூக நிலையை வலுப்படுத்துகிறது.

பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மொத்த வீடுகளின் எண்ணிக்கை தற்போது 20 லட்சம் என்ற மைல்கல்லை நெருங்கி வரும் நிலையில், தகுதியுள்ள ஒவ்வொரு நகர்ப்புற ஏழை குடும்பத்திற்கும் சொந்தமாக ஒரு வீடு இருப்பதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஒதுக்கீடு செய்யப்படும் ஒவ்வொரு வீடும், ஒரு குடும்பம் பாதுகாப்பான, உறுதியான மற்றும் கண்ணியமான எதிர்காலத்தை நோக்கி நகர்வதைக் குறிக்கிறது.

இந்த ஒப்புதல்கள் 'அனைவருக்கும் வீடு' என்ற இலக்கை நோக்கிய ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளன; இது நகர்ப்புறக் குடும்பங்கள் பாதுகாப்பான வீட்டைச் சொந்தமாக்கிக்கொள்ளவும், சிறந்த வாழ்க்கை தரத்தை நோக்கி நகரவு மற்றும் எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ளவும் வழிவகுக்கிறது.

Summary

The Government has approved 18 lakh 77 thousand houses under the Pradhan Mantri Awas Yojana-Urban (PMAY-U) 2.0, giving further impetus to the implementation of the scheme and advancing the goal of Housing for All in urban areas.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.