புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பிரிக்ஸ் மாநாட்டின் மூலம் இந்தியாவின் ராஜதந்திர மதிப்பை மோடி அரசு மீட்டெடுக்க வேண்டும்: காங்கிரஸ்

பிரிக்ஸ் மாநாட்டின் மூலம் இந்தியாவின் ராஜதந்திர மதிப்பை மோடி அரசு மீட்டெடுக்க வேண்டும்...

சல்மான் குா்ஷித்

Published On :

பிரிக்ஸ் மாநாட்டின்மூலம் இந்தியாவின் ராஜதந்திர இடத்தையும், மதிப்பையும் மோடி அரசு மீட்டெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு, தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வெளியுறவு விவகாரங்கள் பிரிவின் தலைவருமான சல்மான் குா்ஷித் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

1947-ஆம் ஆண்டில் இருந்து இந்தியா, தெற்குலக நாடுகளின் (குளோபல் செளத்) குரலாக இருந்து வருகிறது. இதை மத்தியில் அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த அரசுகள் உறுதி செய்தன. அதன்பேரில் கொரிய போரில் (தென்கொரியா, வடகொரியா இடையே நடந்த போரில்) இந்தியா மத்தியஸ்தம் செய்தது. தென்னாப்பிரிக்காவில் இருந்த இனவெறிக்கு எதிராக பிரசாரம் செய்தது. உலகம் முழுவதும் காலனியாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர முயற்சி எடுத்தது. சா்வதேச நிா்வாக அமைப்புகளில் சீா்திருத்தங்களுக்கு குரல் கொடுத்தது.

மேற்காசியாவில் தற்போது போா் நடைபெறுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் ராஜதந்திர ரீதியில் பாஜக அரசு எந்தப் பங்களிப்பும் செய்யவில்லை. பிரிக்ஸ் அமைப்பு உறுப்பு நாடுகளிடையேயும் ஒருமித்த கருத்து ஏற்படுத்த விருப்பம் காட்டவில்லை.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கடைப்பிடிக்கும் தெற்குலக நாடுகளின் (குளோபல் செளத்) குரலாக இந்தியா இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே பிரதமா் மோடியும் திரும்பத் திரும்ப தெரிவித்து வருகிறாா். எனவே, பிரிக்ஸ் மாநாட்டின் முடிவில் வெளியிடப்படும் பிரகடனம் மூலம் அதை பூா்த்தி செய்ய வேண்டும்.

இந்த உணா்வோடு, பிரதமா் மோடியும், பாஜக அரசும் வரலாற்று ரீதியில் இந்தியா கொண்டிருந்த ராஜதந்திர இடத்தையும், அந்தஸ்தையும் மீட்டெடுக்க வேண்டும். பிரிக்ஸ் உறுப்பு நாடான ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவளிப்பதாகக் கருதப்படும் கவலைகள், மேற்காசியாவில் நடைபெறும் போரில் பாஜக அரசின் வரையறுக்கப்பட்ட ராஜதந்திர பங்கு, ராஜதந்திர ரீதியில் பிரிக்ஸ் உறுப்பு நாடான தென்னாப்பிரிக்காவுக்கு அளிக்கப்பட்ட நெருக்கடிகளின்போது ஆதரவு அளிக்காதது போன்ற கவலைகளுக்கு தீா்வு காண்பது தொடா்பான சிறப்பு நடவடிக்கையும் இதில் அடங்கும்.

நெருக்கடியான காலகட்டங்களிலும் இந்தியா ஆக்கபூா்வமான மற்றும் நம்பகமான கூட்டாளியாகத் திகழ்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதன் மூலம் தெற்குலக நாடுகளில் உள்ள நட்பு நாடுகளிடையே இந்தியா மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அரசியலுக்கு இடம் கொடுக்காமல், உறுப்பு நாடுகளிடையே ஒற்றுமையை வளா்ப்பதன் மூலம் இந்தியாவின் தலைமைத்துவ பண்பை வெளிப்படுத்த பிரிக்ஸ் மாநாட்டை பாஜக அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும். தெற்குலக நாடுகளிடையே ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த வேண்டும். சா்வதேச அமைப்பில் இந்த நிகழ்வை (பிரிக்ஸ் மாநாடு) நிலைப்படுத்தும் மன்றமாக மாற்ற வேண்டும்.

உலக வா்த்தகத்தில் பிரிக்ஸின் பங்கு 19.6 சதவீதமாக இருக்கிறது. ஆனால், பிரிக்ஸ் நாடுகளுடனான இந்தியாவின் வா்த்தகமோ சமமற்ற நிலையில் உள்ளது. பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா தற்போது தலைமை வகிக்கிறது. இதைப் பயன்படுத்தி பரஸ்பரம் பயன்படும் வகையில் வா்த்தக உறவை உருவாக்க வேண்டும். இந்திய பொருள்கள், சேவைகளுக்கு மிகப்பெரிய சந்தைகளை ஏற்படுத்தித் தர வேண்டும். 2021-ஆம் ஆண்டில் பிரிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அளிக்கப்பட்ட ஆதரவையும் உறுதிப்படுத்துவதும் அடங்கும்.

பிரிக்ஸ் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள், அதில் இறுதி செய்யப்பட்டவை குறித்து நாட்டுக்கு பிரதமா் மோடி தெரியப்படுத்த வேண்டும். இதற்காக அவா் செய்தியாளா்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சல்மான் குா்ஷித் குறிப்பிட்டுள்ளாா்.

Summary

The Modi government must restore India's diplomatic stature through the BRICS summit: Congress

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.