தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

சுவதந்திர பரத்வாஜுக்கு 3 வார இடைக்கால ஜாமீன்! தில்லி நீதிமன்றம் உத்தரவு!

இந்துத்துவ ஆதரவாளர் சுதந்திர பரத்வாஜுக்கு இடைக்கால ஜாமீன்...

Swatantra Bhardwaj

சுஸ்வதந்த்ர பரத்வாஜ் - X

Published On :

இந்துத்துவ ஆதரவாளர் சுவதந்திர பரத்வாஜுக்கு தில்லி நீதிமன்றம் மூன்று வார இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜந்தர் மந்தரில் சிஜேபி போராட்டத்தின்போது சிஜேபி அமைப்பைச் சேர்ந்த நிஷு ஆசாத் என்பவரின் தந்தையான சஞ்சய் குமாரைத் தாக்கிய இந்துத்துவ ஆதரவாளரும் சமூக ஊடகப் பிரபலமுமான சுவதந்திர பரத்வாஜ் மீது நடவடிக்கை கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற வீதியின் காவல் நிலையத்திற்கு அருகே சிஜேபியினர், பரத்வாஜ் மீது கடுமையான நடவடிக்கை கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து, புலந்த்ஷஹரில் செப். 4ல் பரத்வாஜ் கைது செய்யப்பட்டார்.

சுவந்திர பரத்வாஜுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனு மீதான உத்தரவு செப்டம்பர் 15-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அமர்வு நீதிபதி மூன்று வார இடைக்கால ஜாமீன் வழங்கியதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.