டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

எங்கள் குழுவில் 5,000 பேர்..! - கனடா அரசுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மிரட்டல் கடிதம்!

கனடா பாதுகாப்பு அமைச்சகத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் அனுப்பியதாகக் கூறப்படும் மிரட்டல் கடிதம் குறித்து...

Lawrence Bishnoi gang

லாரன்ஸ் பிஷ்னோய் - கோப்புப் படம்

Published On :

கனடாவில், தங்களின் கும்பலில் 5,000 உறுப்பினர்களும், காவல் துறையினரை விட அதிக துப்பாக்கிகளும் இருப்பதாகக் கூறி கனடாவின் பாதுகாப்பு அமைச்சர், ராணுவம் மற்றும் காவல் துறைக்கு லாரன்ஸ் பிஷ்னோய்யின் கும்பல் மிரட்டல் கடிதம் அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி லாரன்ஸ் பிஷ்னோய்யின் கும்பல் கனடா நாட்டில் துப்பாக்கிச் சூடு, பணம் பறிப்பு, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, நாடு கடத்தப்படவுள்ள பிஷ்னோய் கும்பலைச் சார்ந்தவர்கள் குறித்து கனடாவின் புலம்பெயர்வோர் மற்றும் அகதிகள் வாரியம் மேற்கொண்ட விசாரணையில் சில முக்கிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டன.

இந்த ஆவணங்களில், லாரன்ஸ் பிஷ்னோய்யின் கும்பலைச் சேர்ந்த அமிதோஸ் பஜ்வா மற்றும் சாஹிப்ஜோத் சிங் ஆகியோர் கனடாவின் பாதுகாப்பு அமைச்சர், ராணுவம் மற்றும் காவல்துறையினர் ஆகியோரைக் குறிப்பிட்டு அப்போட்ஸ்ஃபோர் காவல் துறைக்கு அனுப்பிய மிரட்டல் கடிதமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமிதோஸ் மற்றும் சாஹிப்ஜோத் ஆகிய இருவரும் கனடாவின் பல்வேறு நகரங்களில் பணம் பறிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் என கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கனடா அதிகாரிகளுக்கு அனுப்பிய மிரட்டல் கடிதத்தில்,

“நாங்கள் உங்களுக்கு எழுத்துப்பூர்வமாக எச்சரிக்கை மற்றும் சவால் விடுக்கின்றோம். நாங்கள் ஒரு இந்திய கும்பல் எங்களை உங்களால் தடுக்க முடியாது. நாங்கள் கனடாவை ஆட்சி செய்வோம் என்பது உங்களுக்குப் புரிகிறதா.

நாங்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள். கனடாவில் எங்கள் கும்பலில் 5,000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் வெறும் 1000 டாலர்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடியவர்கள். எங்களை உங்களால் தடுக்க முடியுமா. நாங்கள் கனடாவைக் கைப்பற்றுவதை நீங்கள் காண்பீர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Lawrence Bishnoi's gang sent a threatening letter to Canada's Defence Minister claiming that the gang has 5,000 members and possesses more guns than the police force.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.