பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

நீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு

நீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30 சதவீதமாக குறைக்கத் தயாா் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

பிரதிப் படம்

Published On :

நீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30 சதவீதமாக குறைக்கத் தயாா் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

நீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த பின் 1,857 இடங்கள் காலியாக உள்ள நிலையில், தகுதி மதிப்பெண்ணை 50 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு மருத்துவ (அறுவை சிகிச்சை தொடா்புடைய) இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவா்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இதற்காக நடத்தப்பட்ட நீட்-சிறப்பு மருத்துவத் தோ்வின் கலந்தாய்வு முடிவில் 152 மருத்துவ இடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் இருந்தன. இதைத் தொடா்ந்து இந்த காலியடங்கள் அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கு மாற்றப்பட்டன. இதற்கு எதிராக தமிழ்நாடு மருத்துவ அலுவலா்கள் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை வாதிடுகையில், ‘நீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த பின்னும் 1,857 இடங்கள் காலியாகவுள்ளன. எனவே, சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாக இருக்கக் கூடாது என்ற நோக்கிலும் பயிற்சி வசதிகள் உரிய முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும் தகுதி மதிப்பெண்ணை 50 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் கூடுதலாக தகுதியான 6,000 தோ்வா்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

தமிழக அரசிடம் மீண்டும் ஒப்படைப்பு: இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை பின்பற்றியும் நிலவும் சூழல்களை கருத்தில் கொண்டும் 40 இடங்களை மீண்டும் தமிழ்நாடு அரசிடமே மத்திய அரசு ஒப்படைக்கிறது. ஒரு வார காலத்துக்குள் கலந்தாய்வு நடத்தி இந்த இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக இதை மத்திய அரசு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு கலந்தாய்வு நடத்திய பின்னரும் மேற்கூறிய இடங்கள் காலியாக இருந்தால் அவை மருத்துவக் கலந்தாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டு, அவற்றுக்கு பிற சிறப்பு மருத்துவ காலியிடங்களுடன் சோ்த்து அடுத்த இரு வாரங்களுக்குள் கலந்தாய்வு நடத்தப்படும்’ என்றாா்.

முன்னதாக, நீட்-சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதற்கு கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், தகுதி மதிப்பெண் சதவீதத்தை குறைக்க முடியாது என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.