மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

யுஜிசி நெட் தோ்வு 2026: மறுதேர்வு பாடங்களுக்கான இறுதி விடைக்குறிப்புகள் வெளியீடு

ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கான யுஜி-நெட் செப்டம்பர் 2026 மறுத்தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்புகளை

UGC-NET June 2026 exam

தேசிய தோ்வு முகமை (என்டிஏ) - கோப்புப்படம்

Published On :

புதுதில்லி: ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கான யுஜி-நெட் செப்டம்பர் 2026 மறுத்தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்புகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய 3 பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு வகையான பிழைகள் இருப்பதாகப் பெறப்பட்ட புகாா்களை தொடர்ந்து, மேற்கண்ட மூன்று பாடங்களுக்கான மறுதேர்வை ஆக்ஸ்ட் 16 ஆம் தேதி என்டிஏ அறிவித்தது.

அதன்படி, நாட்டில் உள்ள 272 நகரங்களில் உள்ள 454 மையங்களில் ஆங்கிலம் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான தேர்வுகள் செப்.9-ஆம் தேதியும், சமூகவியல் பாடத்திற்கான தேர்வு செப்.10 ஆம் தேதியும் நடைபெற்றன.

இந்த நிலையில், ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கான யுஜி-நெட் ஜூன் 2026 மறுத்தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்புகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி https://ugcnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் பாடங்களுக்கான இறுதி விடைக்குறிப்புகளை தெரிந்துகொள்ளலாம்.

தேர்வர்கள் விடைக்குறிப்பு மற்றும் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது விளக்கங்கள் தேவைப்பட்டால், இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தொடர்பு விவரங்கள் மூலம் விண்ணப்பதாரர்கள் என்டிஏ உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NTA has released the final answer keys for the UGC-NET June 2026 examination conducted in three subjects

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.