யுஜிசி நெட் தேர்வில் ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான மறுதேர்வு தேதிகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.
87 பாடங்களுக்கான 2026 யுஜிசி நெட் தேர்வு ஜூன் 22 முதல் ஜூன் 30 வரை நடைபெற்றது. இதில், 84 பாடங்களுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) இன்று வெளியிட்டது.
ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு பிழைகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்த நிலையில் அவற்றிற்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இதுபற்றி ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இத்தேர்வுகளை எழுதிய விண்ணப்பதாரர்களிடமிருந்து பல புகார்கள் வந்ததையடுத்து முக்கிய அறிஞர்களின் பெயர்களில் எழுத்துப் பிழைகள், புத்தகத் தலைப்புகளில் பிழைகள் போன்ற பல வகையான பிழைகள் கண்டறியப்பட்ட நிலையில், இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
பிழைகளின் தன்மை காரணமாக இந்த மூன்று பாடங்களுக்கான தேர்வுகளையும் புதிதாக நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து, ஆங்கிலம் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான மறுதேர்வு செப்டம்பர் 9-ஆம் தேதியும், சமூகவியல் பாடத்திற்கான தேர்வு செப்டம்பர் 10-ஆம் தேதியும் நடைபெறும் என யுஜிசி அறிவித்துள்ளது.
மறுதேர்வுகள் விவரம்:
ஆங்கிலம்: செப்டம்பர் 9, முதல் பிரிவு - காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை
வணிகவியல்: செப்டம்பர் 9, இரண்டாம் பிரிவு - மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை
சமூகவியல்: செப்டம்பர் 10, முதல் பிரிவு - காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை
Summary
UGC NET Exam: Re-examination announced for English, Commerce, and Sociology subjects!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








