அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

யுஜிசி நெட் தோ்வு 2026: மறுதேர்வு பாடங்களுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியீடு

யுஜிசி-நெட் தோ்வு ஜூன் 2026 மறுதேர்தேர்வின் 3 பாடங்களுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியானது குறித்து...

UGC-NET June 2026 exam

தேசிய தோ்வு முகமை (என்டிஏ) - கோப்புப்படம்

Published On :

புது தில்லி: யுஜிசி-நெட் தேர்வு ஜூன் 2026 ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான மறுதேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய 3 பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு வகையான பிழைகள் இருப்பதாகப் பெறப்பட்ட புகாா்களை தொடர்ந்து, மேற்கண்ட மூன்று பாடங்களுக்கான மறுதேர்வை என்டிஏ அறிவித்தது.

அதன்படி, ஆங்கிலம் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான தேர்வுகள் செப்.9-ஆம் தேதியும், சமூகவியல் பாடத்திற்கான தேர்வு செப்.10 ஆம் தேதியும் நடைபெற்றன.

இந்த நிலையில், மறுதேர்வு நடைபெற்ற ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை என்டிஏ வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தேர்வர்கள் விடைக்குறிப்புகள் மீதான ஆட்சேபனைகளை அதிகாரப்பூர்வ யுஜிசி-நெட் இணையதளம் வழியாக ஆன்லைனில் செப்.13 தேதி வரை தெரிவிக்கலாம். ஆட்சேபனை தெரிவிக்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் உரிய ஆவணச் சான்றுகளைத் தேர்வர்கள் இணைக்க வேண்டும்.

தேர்வர்கள் விடைக்குறிப்பு மற்றும் ஆட்சேபனை தொடா்பான தகவல்களுக்கு அதிகாரப்பூா்வ இணையதளம் மற்றும் சரிபாா்க்கப்பட்ட சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்படும் தகவல்களை மட்டுமே நம்புமாறு என்டிஏ அறிவுறுத்தியுள்ளது.

Summary

NTA has released provisional answer keys for the retest of English, Commerce and Sociology papers of UGC NET June 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.