உ.பி.யில் கட்டப்பட்டு வந்த வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது: 2 பேர் பலி!
கான்கிரீட் தளம் இடிந்து விழுந்தது பற்றி...

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது - dns
உத்தரப் பிரதேசத்தின் புடான் மாவட்டத்தில், வீட்டின் கூரை அமைக்கும் பணியின்போது கான்கிரீட் தளம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் உஜ்ஹானி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நாசிர்பூர் கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தல்வீர் (எ) பன்னலால் என்பவருக்குச் சொந்தமான வீடு கட்டப்பட்டு வந்த நிலையில், அதன் மேற்கூரைத் தளம் திடீரென இடிந்து விழுந்ததில் மூன்று பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டதாக காவல்துறையினர் கூறினர்.
அவ்னிஷ் 28 அண்டை மாவட்டமான ஷாஜஹான்பூரின் மதன்ப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், வீட்டின் உரிமையாளர் தல்வீர் மற்றும் சந்திரபான் (42) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இடிந்து விழும் சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்களும் காவல்துறையினரும் இணைந்து, பெரும் முயற்சிக்குப் பிறகு இடிபாடுகளுக்குள் சிக்கிய மூவரையும் மீட்டனர்.
அவ்னிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், தல்வீர் மற்றும் சந்திரபான் ஆகியோர் மாவட்ட மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் சந்திரபான் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தல்வீர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் உடல்களை உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





